×

இந்தியா- சீனா எல்லை பிரச்னை ஒரு அங்குலம்கூட விட்டுக்கொடுக்க முடியாது: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

சென்னை : இந்தியா- சீனா எல்லை பிரச்னை தொடர்பாக நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது: லடாக்கின் எல்லைப் பகுதியில், தேசத்துக்காக போராடும் போது,  வாழும் சூழ்நிலை அற்ற நிலப்பரப்பில், எல்லைப் பகுதியில் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த துணிச்சலான 20 இந்திய வீரர்களுக்கு வீரவணக்கத்தை தெரிவிக்கிறேன். பிரதமர், கடினமான ஒரு நேரத்தில் நாட்டை வழி நடத்திக்கொண்டிருக்கிறார். கொரோனா தொற்றுநோயை எதிர்கொண்டுள்ள இந்த நேரத்தில், தேசத்தை அமைதியாக வழி நடத்துகிற மெச்சத்தகுந்த  தலைமையினை ஏற்றுள்ள, பிரதமருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நமது நாட்டின் எல்லைகளை பாதுகாக்கும் நடவடிக்கைகளில்,  பிரதமர், இந்திய அரசு மற்றும் நமது பாதுகாப்பு படைகளுக்கு பின்னால் தமிழகம் மற்றும் அதிமுக துணை நிற்கின்றன.

இந்தியாவின் எல்லைப்பகுதியில்  ஒரு அங்குலம் கூட ஒருபோதும் யாருக்கும் விட்டுக்கொடுக்கப்படாது. ஜெயலலிதா தொடர்ந்து வலியுறுத்தியதுபோல, நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு எந்த நிலையிலும் பாதுகாக்கப்பட வேண்டும். இந்த அம்சத்தில் எந்த சமரசமும் இருக்க முடியாது. பிரதமரின் புத்திசாலித்தனம் மற்றும் ஊக்கமளிக்கும் தலைமையின் கீழ் நமது நாடு, தொற்றுநோயால் ஏற்படும் சவால்களை மட்டுமல்ல, நம்முடைய எதிரிகள், எவருடைய முயற்சிகளையும்  நிச்சயமாக  வெல்லும். இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் பேசினர்.

Tags : India ,O. Panneerselvam ,China ,talks ,CM OPS ,Border ,Tamilnadu , Tamilnadu Deputy CM OPS,All part Meeting,China ,Border
× RELATED ஒரிஜினலை ரவுண்டு கட்டும் டூப்ளிக்கேட்டுகள்: ‘OPS’களின் அட்ராசிட்டி