×

வளைகுடாவில் இறந்தவர்களின் உடல்கள் தமிழகம் வந்தன

சென்னை : மதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை: கோவில்பட்டி அப்பனேரியைச் சேர்ந்த பிரகாஷ் திருப்பதி (26) ஓமன் (மஸ்கட்) நாட்டில் உயிரிழந்தார் என்ற தகவல் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோவுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர், வெளியுறவுத்துறை மூலமாக உடலை தாயகம் கொண்டுவர முயற்சிகள் மேற்கொண்டார். இந்நிலையில், பிரகாஷ் திருப்பதி உடல் கடந்த ஜூன் 18ம் தேதி  காலை சென்னை  விமான நிலையம் வந்து சேர்ந்தது. உறவினர்கள் உடலை பெற்று, சொந்த ஊருக்குச் சென்றனர்.

இதேபோல, ஓமன் நாட்டில் பணிபுரிந்து வந்த கலிங்கப்பட்டியைச் சேர்ந்த சுப்பிரமணி, 12 நாட்களுக்கு முன்பு இயற்கை எய்தினார்.  வைகோ முயற்சியால், அவரது உடல் திருவனந்தபுரம் வந்து சேர்ந்தது.பெரம்பலூர் மாவட்டம் - குன்னம் அருகே பேரளி கிராமத்தைச் சேர்ந்த மதுரை வீரன், அபுதாபியில் இயற்கை எய்தினார். அவரது உடலை கொண்டுவர வைகோ முயற்சி மேற்கொண்டு இருந்தார். மதுரைவீரன் உடல்  ஜூன் 26ம் தேதி சென்னை வருகிறது.

Tags : Gulf ,Tamil Nadu ,Bodies ,countries , native,Gulf countries, workers bodies
× RELATED மூணாறு அருகே நிலச்சரிவில் சிக்கிய...