×

ப்ளீஸ் ஒரு நிமிஷம் இருங்க... ஒரு நிமிஷம் இருங்க... அய்யோ என் அப்பாவை ஒருமுறை தொட விடுங்களேன்

* இன்ஸ்பெக்டர் பாலமுரளியின் குழந்தைகள், மனைவி கதறல்
* மக்களின் மனதை உருக்கும் சமூகவலைதள வீடியோ

சென்னை : சென்னை மாம்பலம் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் பாலமுரளி (47). பொறியியல் பட்டதாரியான இவர், கடந்த 2000ம் ஆண்டு காவல் துறையில் உதவி ஆய்வாளராக தேர்வாகி தனது பணியை தொடங்கினார். பாலமுரளிக்கு மனைவி கவிதா, மகள் ஹர்ஷவர்தனி, மகன் நிஷாந்த் ஆகியோர் உள்ளனர். கொரோனா தடுப்பு ஊரடங்கின் போது இன்ஸ்பெக்டர் பாலமுரளி இரவு பகல் பாராமல் கடுமையாக பணியாற்றினார். இதனால் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி கடந்த 17ம் தேதி ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் உயிரிழந்தார். பின்னர் சுகாதாரத்துறை அதிகாரிகள் பாதுகாப்புடன் கண்ணம்மாபேட்டை சுடுகாட்டிற்கு அமரர் ஊர்தியில் இன்ஸ்பெக்டர் பாலமுரளி உடலை கொண்டு செல்ல வந்தனர்.

அப்போது, பாலமுரளியின் முகத்தை பார்க்க மருத்துவமனை முன்பு நின்று கொண்டிருந்த அவரது மனைவி கவிதா, மகள் ஹர்ஷவர்தனி, மகன் நிஷாந்த் ஆகியோர் அலறி துடித்து பாலமுரளியின் முகத்தை பார்க்க முயன்றனர்.


 நோய் தொற்று ஏற்படும் என்பதால் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் உடல் அருகே விடாமல் தடுத்தனர். இருந்தாலும், அவரது மகள் ஹர்ஷவர்தனி, ‘ப்ளீஸ் ஒரு நிமிஷம் இருங்க என்று கூறியபடி பாதுகாப்புக்கு இருந்த அனைவரையும் மீறி தனது தந்தையை பார்க்க துடித்தார். ஆனாலும் அவரை விடாமல் தடுத்தனர். அதையும் மீறி ‘அய்யோ  என் அப்பாவை பார்க்கணும் விடுங்க... அய்யோ அப்பா... ஒரு நிமிஷம் விடுங்க... எங்க அப்பாவை தொட விடுங்க ப்ளீஸ்...’ என்று அழுது துடித்தனர்.

ஆனாலும் சுகாதாரத்துறை அதிகாரிகள் நோய் தொற்று பரவும் என்பதால் பாலமுரளி உடலை அமரர் ஊர்தியில் ஏற்றி ெசன்றனர். அவரது மனைவி கவிதா அமரர் ஊர்தியை பிடித்தபடி சிறிது தூரம் ஓடினார். இதை பார்த்த மருத்துவமனையில் இருந்த சிலர் கண்கலங்கி செய்வது தெரியாமல் திகைத்து நின்றனர். இன்ஸ்பெக்டர் பாலமுரளியின் முகத்தை பார்க்க அவரது இரண்டு குழந்தைகள் மற்றும் மனைவி படும் காட்சி, நேற்று வீடியோவாக சமூக வலைதளங்களில் வெளியாகி மக்கள் மற்றும் போலீசாரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



Tags : Mambalam Inspector Who Dies In Corona ,dad ,Doctors , Mambalam ,Chennai Police,Inspector,Daughter,Pleased
× RELATED செவிலியர்களுக்கு தபால் வாக்கு: பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் கோரிக்கை