×

நாட்டின் ஒரு அங்குல நிலம் கூட பறிபோகாது: தயார் நிலையில் உள்ள முப்படைகள்...அனைத்துக் கட்சி ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி தடாலடி..!!

டெல்லி: இந்திய எல்லைக்குள் சீன படைகள் ஊடுருவவில்லை, ராணுவ நிலையை கைப்பற்றவும் இல்லை என பிரதமர் மோடி கூறியுள்ளார். மேலும் இந்தியாவுக்குள் ஊடுருவ முயற்சித்தவர்களுக்கு தக்க பாடம் கற்பிக்கப்பட்டது என்று  அனைத்துக் கட்சிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

லடாக் எல்லை கல்வான் பள்ளத்தாக்குப்பகுதியில் இந்திய- சீன ராணுவம் இடையே நடந்த மோதலில் இந்தியா தரப்பில் 20 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் சீன ராணுவ வீரர்கள் இரட்டிப்பாக 40 பேர் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க உளவுத்துறை தகவல் தெரிவித்தது. இந்த நிலையில் இந்திய எல்லைக்குள் சீன வீரர்கள் ஊடுருவி விட்டதாக பரவி வந்தது. இதனையடுத்து இன்று பிரதமர் மோடி தலைமையில் காணொலிக் காட்சி மூலம் அனைத்துக்கட்சிகளுடன் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. அதில் பிரதமர் மோடி பேசியதாவது:

* இந்திய எல்லைக்குள் சீன படைகள் ஊடுருவவில்லை, இந்தியாவின் எந்தவொரு ராணுவ நிலையை கைப்பற்றவும் இல்லை

* இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயற்சித்தவர்களுக்கு தக்க பாடம் கற்பிக்கப்பட்டது.

* முன்னர் உண்மையில் கண்காணிக்கப்படாத பகுதிகளைக் கூட நமது ராணுவ வீரர்கள்  இப்போது நன்கு பாதுகாத்து வருகின்றனர்.

* நம் வீரர்கள் மீது நாடு மீது மிகுந்த நம்பிக்கை உள்ளது.  அவர்களுடன் நாம் இருப்பதை நமது வீரர்களுக்கு நான் உறுதியளிக்க விரும்புகிறேன்.

* இந்தியா அமைதியையும் நட்பையும் விரும்புகிறது, ஆனால் இறையாண்மையை நிலைநிறுத்துவதே முதன்மையானது.

* நாட்டின் ஒரு அங்குல நிலத்தின் மீது கூட யாரும் கண் வைக்க முடியாத வகையில் நமது பலம் உள்ளது.

* ஒரே சமயத்தில் பல முனைகளுக்கும் செல்லக்கூடிய திறன் நாட்டின் ஆயுதப்படைக்கு உள்ளது.

* நாட்டை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை நமது ஆயுதப்படைகள் மேற்கொள்ளும்.

* எல்லைப்பகுதிகளில் புதிதாக மேற்கொள்ளப்பட்ட உள்கட்டமைப்புகளால் ரோந்து திறன் அதிகரித்துள்ளது.

* முப்படைகளுக்கும் தேவையான ஆயுதங்கள், விமானங்கள், ஏவுகணை தடுப்பு அமைப்பு வாங்க முக்கியத்துவம் அதிகரிப்பு.

* நாட்டை பாதுகாப்பதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்க ராணுவம் தயார் நிலையில் உள்ளது.

Tags : country ,Modi Ataladi ,All Party Advisory Meeting , Indian border, Ladakh, Armed Forces, PM Modi
× RELATED நாட்டின் ஜனநாயகத்தை காக்க காங்கிரஸ்...