×

சென்னையில் வீடு வீடாக பரிசோதனை செய்ததால் 40,882 பேருக்கு கொரோனா அறிகுறி கண்டுப்பிடிப்பு: சென்னை மாநகராட்சி ஆணையர் விளக்கம்..!!

சென்னை: சென்னையில் வீடு வீடாக சென்று கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளும் பணி தொடர்ந்து வருகிறது. இந்த பணியில் 11 ஆயிரம் பேர் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அறிகுறிகளுடன் கண்டறியப்பட்டுள்ளனர் என்று கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் விளக்கம் அளித்துள்ளார். கொரோனா தொற்று உள்ளதா என சென்னையில் மட்டும் 2.10 லட்சம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. முகாம்களில் அறிகுறிகள் கண்டறியப்பட்டோருக்கு உடனுக்குடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது.  

மேலும் சென்னை உட்பட 4 மாவட்டங்களில் அறிவிக்கப்பட்ட 12 நாள் முழு ஊரடங்கில் மாநகராட்சி ஊழியர்களிடம் மறைக்காமல் உண்மையை கூறுங்கள் எனவும் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனையடுத்து பல இடங்களில் கொரோனா அறிகுறி உள்ளவர்கள், ஏற்பட்ட உடல் பாதிப்பு குறித்து அரசிடம் தெரிவிக்காமல் உள்ளனர் என்றொரு தகவல் வெளியாகி உள்ளது. அதில் துரதிஷ்டவசமாக சிலருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர் என தெரிவித்துள்ளார். மேலும் பொதுமக்கள் தங்களுக்கு ஏற்பட்ட அறிகுறிகளை அரசிடம் தெரிவித்திருந்தால் 10-15% உயிரிழப்புகளை தடுத்திருக்கலாம் என்று தெரிவித்தார். மேலும் காய்ச்சல், சளி இருந்தால் களப்பணியாளர்களிடம் மக்கள் தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

சென்னையில் அதிகமாக பாதிப்பு ஏற்பட்டுள்ள தெருக்களில் கூடுதலாக கொரோனா பரிசோதனை முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். குறிப்பாக நேற்று நடத்தப்பட்ட 483 முகாம்களில் 31,000-க்கும் பயன் பெற்றுள்ளனர். இதில் கொரோனா தொற்று பற்றிய அறிகுறிகளுக்கு மட்டுமின்றி பொதுவாகவே தங்களுடைய உடல் இளைப்புகள் குறித்த பிரச்சனைகளுக்கு உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து ஊரடங்கு காலகட்டத்தில் உள்ள முக்கியமாக கொரோனா தொற்று அதிகம் பாதித்த மண்டலங்களில் கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்நிலையில் கண்காணிப்பு மையத்தில் அமைக்கப்பட்ட தொலைபேசி எங்களை வடிவமைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.


Tags : Chennai ,house ,Commissioner ,house inspection ,Madras Corporation , chennai , Corona, chennai Corporation, Commissioner, Illustration
× RELATED வாக்காளர் பட்டியலில் பெயர்...