×

ஐசிசி தலைவர் பதவிக்கு முன்னாள் இந்திய வீரர் சவுரவ் கங்குலி போட்டியின்றி தேர்வா?..ஐசிசி வட்டாரங்கள் தகவல்..!!

மும்பை: ஐசிசி தலைவராக இந்தியாவின் சஷாங்க் மனோகர் இருந்து வரும் நிலையில் அவரது பதவிக்காலம் ஜூலை வரை உள்ளது, இந்நிலையில் அடுத்த ஐசிசி தலைவர் பதவிக்கான போட்டியில் பாகிஸ்தனின் ஈசான் மானி இருந்து வந்த நிலையில் தற்போது அவர் போட்டியிட விருப்பம் இல்லை என்று தெரிவித்ததால் கங்குலி போட்டியின்றி அடுத்த ஐசிசி தலைவராவார் என்று ஐசிசி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக ஈசான் மானி கூறும்போது, “ஐசிசி தலைவர் பதவி போட்டியில் நான் இல்லை. என்னைப் போட்டியிடுமாறு இந்தியாவிலிருந்து சிலர் கேட்டுக் கொண்டனர், ஆனால் எனக்கு ஆர்வமில்லை. கங்குலி போட்டியிடுகிறாரா என்பது பற்றி எனக்குத் தெரியாது, கடந்த 2006ம் ஆண்டு என் பதவிக்காலம் முடிந்தவுடனேயே ஐசிசி பக்கம் போகக்கூடாது என்று முடிவெடுத்தேன். அப்போது நான் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டேன், இப்போது இம்ரான் கான் என்னை பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு சேவையாற்றுமாறு கேட்டுக் கொண்டார், அதனால் ஐசிசி பதவிப் போட்டியில் நான் இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து ஐசிசி தலைவர் பதவிக்கு சவுரவ் கங்குலி போட்டியின்றி தேர்வு செய்யப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. முறைப்படி ஐசிசி தேர்தல் அறிவித்தால் இது தொடர்பாக அறிவிப்போம் என்று பிசிசிஐ அதிகாரி அருண் துமால் கூறியுள்ளார்.

Tags : Sourav Ganguly ,ICC ,India ,chairmanship , ICC, Chairman, Sourav Ganguly, Information
× RELATED மம்தாவுடன் சவுரவ் கங்குலி சந்திப்பு திரிணாமுல் காங்கிரசில் இணைகிறாரா?