×

இத்தாலி கோப்பை கால்பந்து:நபோளி 6வது முறையாக சாம்பியன்

ரோம் : ஐரோப்பியாவில் பிரபலமான ‘இத்தாலி கோப்பை’ கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில்   ஜூவென்டஸ் அணியை 4-2 என்ற கோல் கணக்கில் அபராமாக வீழ்த்தி நபோளி அணி 6வது முறையாக  சாம்பியன் பட்டம் வென்றது. இத்தாலியில்  முதன்நிலை போட்டிகளில் ஒன்று   ‘கோப்பா இத்தாலியா’(இத்தாலி கோப்பை) கால்பந்து தொடர். இந்ததொடர் கொரோனா தொற்று பீதி காரணமாக  முதல் சுற்று அரையிறுதிப் போட்டிகளுடன் பிப்.13ம் தேதி நிறுத்தப்பட்டது. இந்நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த  2வது சுற்று அரையிறுதிப் போட்டிகள் ஜூன் 12ம் தேதி   மீண்டும் தொடங்கியது.

 இந்தத் தொடரின் இறுதிப் போட்டி ரோம் நகரில் உள்ள ஒலிம்பியன் அரங்கில் ரசிகர்கள் இல்லாமல்  நடந்தது. அதில் 13முறை சாம்பியன் பட்டம் வென்ற ஜூவென்டஸ் அணியும், 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற நபோளி அணியும் களம் கண்டன. நட்சத்திர ஆட்டக்காரர்கள் கிறிஸ்டியனோ ரொனால்டா, கொரோனாவில் இருந்து மீண்ட பவுலோ டைபாலா ஆகியோர்  ஜூவென்டஸ் அணியில் இருந்தும் பலனில்லை.  ஆட்டம் முழுவதும் இரண்டு அணிகளும் கோல் போடததால் போட்டி டிராவில் முடிந்தது.

அதனால் பெனால்டி ஷூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. அதில் முதல் 2 வாய்ப்புகளையும் வீணாக்கிய ஜூவென்டஸ் அடுத்த 2 வாய்ப்புகளையும் கோலாக்கியது. ஆனால் நபோளி தொடர்ந்து 4 வாய்ப்புகளையும் கோலாக்க, 5வது வாய்ப்புக்கு அவசியமில்லாமல் போனது. எனவே  நபோளி அணி 4-2 எ ன்ற கோல் கணக்கில் வென்று, ஜூவென்டஸ் அணிக்கு அதிர்ச்சி தந்ததுடன், 6வது முறையாக இத்தாலி கோப்பையை கைப்பற்றி சாம்பியன் ஆனது.

Tags : Napoli , Italy Cup Football: Napoli 6th time champion
× RELATED சில்லி பாயின்ட்…