×

ரூ.20,000 கோடி செலவில் புதிய நாடாளுமன்ற கட்டிட திட்ட களப்பணிக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

டெல்லி : ரூ.20,000 கோடி செலவில் புதிய  நாடாளுமன்ற கட்டிட திட்ட களப்பணிக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.ராஜீவ் சூரி என்பவர் தாக்கல் செய்த மனு, நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது,  சுற்றுசூழல் அனுமதி குழு புதிய உத்தரவை பிறப்பித்து உள்ளதால் மனுவில் மாற்றம் செய்ய வேண்டும் என்று மனுதாரர் கோரிக்கை விடுத்தார்.மேலும் விசாரணையை சில நாட்கள் ஒத்திவைக்க கோரிய ,மனுதாரர் அதுவரை புதிய கட்டிட பணியை நிறுத்தி வைக்க வலியுறுத்தினார்.இதைத் தொடர்ந்து நாடாளுமன்ற கட்டிட களப் பணி பற்றி மனுதாரர் புதிய மனுவை தாக்கல் செய்தால் பதில் அளிப்பதாக மத்திய அரசு விளக்கம் அளித்தது. இதையடுத்து திட்ட பணிக்கு தடை விதிக்க மறுத்த உச்சநீதிமன்றம், வழக்கை ஜூலை 7ம் தேதிக்கு ஒத்திவைத்தது.


Tags : Supreme Court , Rs 20,000 Crore, New Parliament, Building, Prohibition, Supreme Court, Denial
× RELATED புதிய தலைமை செயலக கட்டிட வழக்கை அரசு...