×

தாழ்வாக பறந்த விமானப்படை விமானம்: பழநியில் பொதுமக்கள் பீதி

பழநி: பழநியில் தாழ்வாக பறந்த விமானப்படை விமானத்தால் பொதுமக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. இந்திய - சீனா எல்லையில் தற்போது பதற்றமான சூழல் நிலவுகிறது. எல்லையில் நடந்த மோதலில் இந்திய ராணுவத்தை சேர்ந்த 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீன ராணுவத்தை சேர்ந்த 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் நாடு முழுவதும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம், பழநி பகுதியில் கடந்த சில தினங்களாக விமானப்படை விமானங்கள் அடிக்கடி தாழ்வாக பறந்து வருகின்றன. நேற்றும் ஒரு விமானம் தாழ்வாகப் பறந்து சென்றது. இதனால் பொதுமக்களிடையே திடீர் பரபரப்பு, அச்சம் ஏற்பட்டது. இதுகுறித்து காவல்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘கோவை மாவட்டம், சூலூரில் விமானப்படை தளம் உள்ளது. இங்குள்ள விமானங்கள் பயிற்சிக்காக அடிக்கடி பறந்து செல்வது வழக்கம். பயிற்சிக்காகவே தாழ்வாக பறந்து சென்றிருக்கும். இதனால் பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை’’ என்றனர்.

Tags : Air Force ,Palani , Low-flying Air Force,aircraft, General panic ,Palani
× RELATED ரபேல் போர் விமான பேரத்தில் தொடர்புடைய...