×

சீன பொருட்களை புறக்கணியுங்கள்

புதுடெல்லி: ‘சீனப் பொருட்களை புறக்கணிக்க வேண்டும்’ என மத்திய அமைச்சர்கள், ராம்விலாஸ் பஸ்வான் மற்றும் ராம்தாஸ் அதவாலே வலியுறுத்தி உள்ளனர். கடந்த திங்களன்று இரவு கிழக்கு லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன ராணுவம் நடத்திய தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் உயிர் தியாகம் செய்தனர். இந்த சம்பவத்தால், இந்திய மக்களிடம் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. சீனாவின் இந்த செயலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதோடு, சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் எனவும் முழக்கமிட தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில், மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் டெல்லியில் நேற்று அளித்த பேட்டியில், ‘‘நாட்டு மக்கள் அனைவரும் சீனப் பொருட்களை நிராகரிக்க வேண்டும். இனி பிஐஎஸ் தர விதிகளை மத்திய அரசு கடுமையாக பின்பற்றும்’’ என்றார். சீனப் பொருட்கள் எதுவும் தர விதிகளை பின்பற்றுவதே இல்லை. இனி தர விதிகளை கடுமையாக பின்பற்றப்போவதாக அமைச்சர் கூறியிருப்பதன் மூலம், சீன பொருட்கள் விற்பனையை தடுக்க மத்திய அரசு கிடுக்கிப்பிடி போடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
இதேபோல், மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அதவாலே நேற்று கூறுகையில், ‘‘சீன உணவுகளை விற்பனை செய்யும் ரெஸ்டாரண்டுகளுக்கு தடை விதிக்க வேண்டும்,’ என வலியுறுத்தி உள்ளார். முன்னதாக, இந்த மாத தொடக்கத்திலேயே அகில இந்திய வர்த்தக கூட்டமைப்பானது, ஜூன் 10ம் தேதி முதல் நாடு முழுவதும் சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற பிரசாரத்தை அறிவித்தது. ஆர்எஸ்எஸ்-சின் ஸ்வதேசி ஜக்ரான் மன்ச் அமைப்பும், ‘சீன தயாரிப்புகளை புறக்கணிக்க வேண்டும்,’ என்று வலியுறுத்தி உள்ளது.

Tags : Chinese , Boycott chinise products
× RELATED இந்தியா-சீனா இடையே வலுவான உறவு இரு...