×

ஆவடி மாநகராட்சியில் தொற்றுக்கு முதியவர் பலி

ஆவடி :ஆவடி மாநகராட்சியில் கொரோனா தொற்றுக்கு முதியவர் ஒருவர் பலியானார். மேலும், இதுவரை 18பேர் பலியாகியுள்ளனர். இதோடு மட்டுமல்லாமல், பாதிப்பு எண்ணிக்கை  450ஆக உயர்ந்துள்ளது.ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஆவடி, திருமுல்லைவாயல், பட்டாபிராம், கோவில்பதாகை, அண்ணனூர், மிட்டனமல்லி முத்தாபுதுப்பேட்டை ஆகிய பகுதிகளில் கோரோனா தொற்றால் பாதிப்பு, இறப்பு எண்ணிக்கை தொடர்கிறது. இதனையடுத்து அங்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 450ஆக உயர்ந்துள்ளது.

 இவர்களில் 225பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர் மேலும் 200க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று முன்தினம் மட்டும் ஒரே நாளில் 24பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், நேற்று ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட திருமுல்லைவாயல், ஸ்ரீதேவி நகர், ராஜேஸ்வரி தெருவை சேர்ந்த 77வயது முதியவர் ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனையடுத்து, இதுவரை பலி எண்ணிக்கை 18ஆக உயர்ந்து உள்ளது.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ஆவடி மாநகராட்சி பகுதிகளில் தொற்று கண்டறியப்பட்ட நபர்கள் வசிக்கும் வீடுகளில் எவ்வித தடுப்பு நடவடிக்கையும் அதிகாரிகள் எடுப்பதில்லை. மேலும், அப்பகுதியில் கிருமிநாசினி, பிளீச்சிங் பவுடர் உள்ளிட்ட சுகாதார தடுப்பு பணிகள் செய்யப்படுவதில்லை. மேலும் தொற்று பாதிக்கப்பட்ட நபர் வசிக்கும் வீடுகளின் குடும்ப உறுப்பினர்களிடம் எவ்வித பரிசோதனையும் செய்யப்படுவதில்லை. இதனால் தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவது. எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு ஆவடி மாநகராட்சி பகுதியில் சுகாதார நடவடிக்கைகளை தீவிரப்படுத்த  வேண்டும் என்றனர்.

Tags : Awadhi Corporation ,Avadi Corporation , An elderly person dies of corona infection in Avadi Corporation
× RELATED ஆவடி மாநகராட்சியில் பட்ஜெட் தாக்கல்: 47 தீர்மானங்கள் நிறைவேற்றம்