×

இந்தியாவில் கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா,..பாதிப்பு 3.80 லட்சத்தை தாண்டியது,..கடந்த 24 மணி நேரத்தில் 336 பேர் உயிரிழப்பு

டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 லட்சத்து 80  ஆயிரத்தை தாண்டியது. உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீ போல பரவி வருகிறது. ஆட்கொல்லி கொரோனா  வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,80,532 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 13,586 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 336 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம்   அறிவித்துள்ளது. கொரோனாவால் இதுவரை 12,573 பேர் உயிரிழந்த நிலையில் 2,04,711 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 120,504 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 5751 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 60,838 பேர் குணமடைந்துள்ளனர். இந்த வரிசையில் தமிழகம் தொடர்ந்து 2-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் 52,334 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை  625 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 28641 பேர் குணமடைந்துள்ளனர். டெல்லி 3-வது இடத்தில் உள்ளது. டெல்லியில் 49979 பேருக்கு  தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு, 1969 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 21341 பேர் குணமடைந்துள்ளனர். உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 4-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மாநில வாரியாக விவரம்:

அசாமில் 4777 பேருக்கு பாதிப்பு; 9 பேர் பலி; 2654 பேர் குணமடைந்தது.
பீகாரில் 7025 பேருக்கு பாதிப்பு; 44 பேர் பலி; 5056 பேர் குணமடைந்தது.
சண்டிகரில் 374 பேருக்கு பாதிப்பு; 6 பேர் பலி; 306 பேர் குணமடைந்தது.
சத்தீஸ்கரில் 1946 பேருக்கு பாதிப்பு; 10 பேர் பலி; 1228 பேர் குணமடைந்தது.

கோவாவில் 705 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 109 பேர் குணமடைந்தது.
குஜராத்தில் 25601 பேருக்கு பாதிப்பு; 1591 பேர் பலி; 17819 பேர் குணமடைந்தது.
அரியானாவில் 9218 பேருக்கு பாதிப்பு; 134 பேர் பலி; 4556 பேர் குணமடைந்தது.
திரிபுராவில் 1155 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 639 பேர் குணமடைந்தது.

கேரளாவில் 2794 பேருக்கு பாதிப்பு; 21 பேர் பலி; 1415 பேர் குணமடைந்தது.
ராஜஸ்தானில் 13857 பேருக்கு பாதிப்பு; 323 பேர் பலி; 10742 பேர் குணமடைந்தது.
ஜார்கண்டில் 1920 பேருக்கு பாதிப்பு; 11 பேர் பலி; 1198 பேர் குணமடைந்தது.
லடாக்கில் 687 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 95 பேர் குணமடைந்தது.

மணிப்பூரில் 606 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 199 பேர் குணமடைந்தது.
மேகலாயாவில் 44 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 30 பேர் குணமடைந்தது.
மிஸ்ரோமில் 130 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 1 பேர் குணமடைந்தது.
நாகாலாந்தில் 193 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 103 பேர் குணமடைந்தது.
ஒடிசாவில் 4512 பேருக்கு பாதிப்பு; 11 பேர் பலி; 3144 பேர் குணமடைந்தது.

பாணடிச்சேரி 271 பேருக்கு பாதிப்பு; 7 பேர் பலி; 109 பேர் குணமடைந்தது.
பாஞ்சாப்பில் 3615 பேருக்கு பாதிப்பு; 83 பேர் பலி; 2570 பேர் குணமடைந்தது.
உத்தரகாண்ட்டில் 2102 பேருக்கு பாதிப்பு; 26 பேர் பலி; 1386 பேர் குணமடைந்தது.
கர்நாடகாவில் 7944 பேருக்கு பாதிப்பு; 114 பேர் பலி; 4983 பேர் குணமடைந்தது.

ஜம்மு காஷ்மீரில் 5555 பேருக்கு பாதிப்பு; 71 பேர் பலி; 3144 பேர் குணமடைந்தது.
தெலுங்கானாவில் 6027 பேருக்கு பாதிப்பு; 195 பேர் பலி; 3301 பேர் குணமடைந்தது.
மேற்கு வங்கத்தில் 12735 பேருக்கு பாதிப்பு; 518 பேர் பலி; 7001 பேர் குணமடைந்தது.
உத்தரப்பிரதேசத்தில் 15181 பேருக்கு பாதிப்பு; 465 பேர் பலி; 9239 பேர் குணமடைந்தது.

ஆந்திரப்பிரதேசத்தில் 7518 பேருக்கு பாதிப்பு; 92 பேர் பலி; 3789 பேர் குணமடைந்தது.
அருணாச்சலப்பிரதேசத்தில் 103 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 10 பேர் குணமடைந்தது.
மத்தியப்பிரதேசத்தில் 11426 பேருக்கு பாதிப்பு; 486 பேர் பலி; 8632 பேர் குணமடைந்தது.
இமாச்சலப்பிரதேசத்தில் 595 பேருக்கு பாதிப்பு; 8 பேர் பலி; 382 பேர் குணமடைந்தது.

அந்தமானில் நிக்கோபார் தீவுகளில் 44 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 33 பேர் குணமடைந்தது.
தாதர் நகர் ஹவேலியில் 58 பேருக்கு பாதிப்பு; 13 பேர் குணமடைந்துள்ளார். யாரும் உயிரிழக்கவில்லை.
சிக்கிமில் 70 பேருக்கு பாதிப்பு; 5 பேர் குணமடைந்துள்ளார். யாரும் உயிரிழக்கவில்லை.

Tags : Corona ,India , India, Corona, curfew, 336 deaths,
× RELATED கொரோனா ஊரடங்குதான் என்னை தொழில் முனைவோராக மாற்றியது!