சென்னை: நடிகர் ரஜின்காந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவன் கைது செய்யப்பட்டார். கடலூர் நெல்லிக்குப்பம் நூர் முகமது நகரைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவனை பிடித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணையில் சிறுவன் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரியவந்ததை அடுத்து பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.