×

இந்தியா - சீனா மோதல் எதிரொலி; 500 வகையான சீன பொருட்களை புறக்கணிக்கப்போவதாக அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு அறிவிப்பு

டெல்லி :  இந்தியா - சீனா இடையே எல்லையில் மோதல் நீடித்து வரும் நிலையில், 500 வகையான சீனப் பொருட்களை பட்டியலிட்டு அவற்றை புறக்கணிக்கப் போவதாக “கெய்ட்” என்றழைக்கப்படும் அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னதாக லடாக் விவகாரத்தில் போருக்கு தயாராக இருங்கள் என சீன ராணுவத்தினருக்கு அந்த நாட்டு அதிபர் ஜின்பிங் எச்சரிக்கை விடுத்துள்ளார் என்ற செய்திகள் உலா வந்த வண்ணம் இருந்தனர்.

அதற்கேற்றாற் போலவே, போரின் முன்னோட்டமாக, எல்லையில் இந்தியா ராணுவத்தினர் மீது சீன ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. இதில், இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த மோதலால் தற்போது இரு நாடுகளிடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. மேலும், இரு நாட்டு தலைவர்களும் மாறிமாறி, எச்சரிக்கைகளை விடுத்து வருகின்றனர்.

இந்த சூழலில் சீனாவின் அத்துமீறிய செயலால் நாடு முழுவதும் மக்கள் கடும் கோபம் அடைந்துள்ளனர். சீன தயாரிப்புகள் அனைத்தையும் வாங்குவதை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழ ஆரம்பித்துள்ளது. இந்நிலையில், அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு புறக்கணிக்க வேண்டிய 500 சீன தயாரிப்பு பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், பொம்மைகள், ஜவுளி ரகங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், சமையலைறை பொருட்கள், ஹார்டுவேர்கள், காலணிகள் என பல ரகங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்திய தயாரிப்புகளே நமது பெருமை என்று தெரிவித்துள்ள கெய்ட் அமைப்பு, சீன பொருட்களின் விளம்பரங்களில் நடிக்க இந்திய திரை நட்சத்திரங்கள் இனி ஒப்பந்தங்கள் போட வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.

Tags : India Traders Association ,India ,conflict ,China , India, China, Conflict, 500 Type, Chinese Goods, All India, Traders, Federation, Announcement
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...