×

2005ம் ஆண்டு போடப்பட்ட போர்க்கால ஒப்பந்தங்களின்படி ஆயுதங்களை பயன்படுத்தவில்லை: லடாக் எல்லை மோதல் குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் விளக்கம்...!!

டெல்லி: லடாக் எல்லை கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் சீனாவுடனான மோதலின் போது இந்திய வீரர்களிடம் ஆயுதங்கள் இருந்தன என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். கடந்த 1996 மற்றும் 2005ம் ஆண்டில் போடப்பட்ட ஒப்பந்தங்களின்படி துப்பாக்கி போன்ற ஆயுதங்களை பயன்படுத்தவில்லை என்று இந்திய வீரர்களிடம் ஆயுதங்கள் வழங்காமல் ஏன் அனுப்புனீர்கள் என ராகுல்காந்தி கேள்வி எழுப்பி இருந்த நிலையில் தற்போது விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில், இந்திய மற்றும் சீன ராணுவத்தினரிடையே கடந்த திங்கட் கிழமை இரவில் நடந்த மோதலில் உயிரிழந்த இந்திய ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 20ஆக அதிகரித்துள்ளதாக இந்திய ராணுவம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் 4 இந்திய ராணுவத்தினர் கவலைக்கிடமாக இருப்பதாக இந்திய அரசின் வட்டாரங்கள் தெரிவிப்பதாக தகவல் பரவியது. இதனையடுத்து நடந்த மோதலில் சீன ராணுவத்தினர் 30-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளதாக அமெரிக்க உளவுத்துறை தகவல் தெரிவித்தது.

இதனையடுத்து இந்திய ராணுவ வீரர்களிடம் ஆயுதங்கள் வழங்காமல் ஏன் அனுப்புனீர்கள் என ராகுல்காந்தி கேள்வி எழுப்பி இருந்த நிலையில் அதற்கு விளக்கம் அளித்த வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறுகையில் மோதலின் போது இந்திய வீரர்களிடம் ஆயுதங்கள் இருந்தன. கடந்த 1996 மற்றும் 2005ம் ஆண்டில் போடப்பட்ட ஒப்பந்தங்களின்படி துப்பாக்கி போன்ற ஆயுதங்களை பயன்படுத்தவில்லை என தெரிவித்துள்ளார்.

கடந்த  2005-ம் ஆண்டு இந்தியா மற்றும் சீனா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டது. இரு நாட்டு ராணுவத்தில் எந்த ராணுவம் அடுத்த நாட்டு எல்லைக்குள் சென்றாலும், மறுபுறம் உள்ள ராணுவம் பேனரை உயர்த்திப் பிடித்து, நீங்கள் உங்கள் எல்லைக்கு திரும்பிப் போங்கள் என்று சொல்வது வழக்கம். இதுதான் இந்த ஒப்பந்தத்தின் சாராம்சம் என முந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags : Wartime Contracts, Weapons, Not Using, Ladakh Conflict, Foreign Minister, Explanation
× RELATED நாடாளுமன்ற 2ம் கட்ட தேர்தல் பிரசாரம்...