×

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டக்களுக்கு மின்கட்டணம் செலுத்த அவகாசம் நீட்டிப்பு இல்லை: ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்

சென்னை: சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டக்களுக்கு மின்கட்டணம் செலுத்த அவகாசம் நீட்டிப்பு இல்லை என தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக மக்கள் வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டதால் மின்கட்டணம் செலுத்துவதறகான கால அவகாசத்தை ஜூலை மாதம் 31-ம் தேதி வரை நீட்டிக்க கோரி வழக்கறிஞர் சி.ராஜேஷ் என்பவர் ஒரு பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்தார். இந்த வழக்கில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் தாக்கல் செய்யப்பட பதில் மனுவில்; கஜா புயல் போன்ற முந்தைய தேசிய பேரிடர்களின் போது நுகர்வோரின் கஷ்டங்களை அறிந்து மின்கட்டணம் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளதாக அந்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல கொரோனா பரவல் தடுக்க அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக மின்கட்டணம் செலுத்துவதற்கான தேதி நீட்டிக்கப்பட்டு அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. நுகர்வோரிடம் இருந்து மின்கட்டணம் வசூலிக்க தடை விதித்தால் அது தமிழ்நாடு மின் உற்பத்தி பகிமான கழகத்திற்கு பெரிய நிதி இழப்பை ஏற்ப்படுத்தும் என்றும்  அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்னன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்கள் தவிர பிற அனைத்து மாவட்டங்களுக்கும் ஜூன் 15-ம் தேதிக்குள் மின்கட்டணம் செலுத்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும்,

இந்த கால அவகாசம் நீட்டிக்கப்படாது என தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறினார். மேலும் இது தொடர்பாக வரும் திங்கள் கிழமை தெரிவிப்பதாக தெரிவித்தார். இதனையடுத்து வழக்கு விசாரணையை வரும் திங்கள்கிழமைக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.


Tags : districts ,Tamil Nadu Government Information Chennai ,Chennai ,Government of Tamil Nadu , Chennai, electricity tariff, no extension of time, eCourt, Government of Tamil Nadu
× RELATED தமிழகத்தில் உள்ள 15 மாவட்டங்களில் இரவு 7...