×

இந்திய வீரர்களை தாக்க முன்கூட்டியே கொண்டு வரப்பட்ட ஆணிகள் பின்னப்பட்ட கட்டைகள்... வெளிச்சத்துக்கு வந்தது சீனாவின் நாசவேலை!! .

பெய்ஜிங் : லடாக்கில் இந்திய வீரர்கள் மீது சீனா முன்கூட்டியே திட்டமிட்டு தாக்குதல் நடத்தியுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னதாக லடாக் விவகாரத்தில் போருக்கு தயாராக இருங்கள் என சீன ராணுவத்தினருக்கு அந்த நாட்டு அதிபர் ஜின்பிங் எச்சரிக்கை விடுத்துள்ளார் என்ற செய்திகள் உலா வந்த வண்ணம் இருந்தனர். அதற்கேற்றாற் போலவே, போரின் முன்னோட்டமாக, எல்லையில் இந்தியா ராணுவத்தினர் மீது சீன ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. இதில், இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த தாக்குதலை சீனா முன்னமே திட்டமிட்டு நடத்தியிருப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், சீன வெளியுறவுத்துறையிடம் குற்றம் சாட்டியுள்ளார். இந்த தாக்குதலின் போது துப்பாக்கிகள் பயன்படுத்தப்படவில்லை. ஏனென்றால், இரு நாட்டு எல்லையை ஒட்டிய 2 கிலோமீட்டர் சுற்றளவுக்கு துப்பாக்கியை பயன்படுத்தக்கூடாது என்கிற விதி வரையறுக்கப்பட்டுள்ளது.இதனால் சீன ராணுவத்தினர் முன்கூட்டியே கூரான ஆணிகள் பின்னப்பட்ட கட்டைகளை தங்களுடன் எடுத்து வந்துள்ளனர். இதுபோன்ற ஆணிகள் பின்னப்பட்ட கட்டைகளால் தாக்கியதால்தான் இந்திய தரப்பில் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது இந்திய ராணுவத்தினர் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : China ,attack ,Indian , Indian soldiers, nails, knitting, bundles, china, sabotage
× RELATED இந்தியாவில் நாச வேலைக்கு சதி தூதரக...