×

சென்னையில் பலியானோருக்கு கொரோனா என 16 நாள் கழித்து மாநகராட்சி நோட்டீஸ்!

சென்னை: சென்னையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதில் அலட்சிய போக்கு காணப்படுவதாக உயிரிழந்த ஒருவரின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். சென்னையில் கடந்த 2ம் தேதி உடல்நிலை சரியில்லாமல் 59 வயது முதியவர் ஸ்டான்லி  மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அவர் வீடுதிரும்பினார். இதையடுத்து உடல்நிலை மிகவும் மோசமானதை தொடர்ந்து, அவர் மீண்டும் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் உயிர் பிரிந்தது. இதனை தொடர்ந்து, முதியவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று மருத்துவர்கள் கூறியதை நம்பி, முதியவரின் சடலம் கடந்த 3ம் தேதி முறையாக அடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் திடீரென்று 16 நாட்கள் கழித்து இறந்தவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், எனவே எண்ணூரில் அவர் வசித்த வீட்டை மாநகராட்சி தனிமைப்படுத்தி இருப்பது அரசின் அலட்சியத்தை காட்டுவதாக இறந்தவரின் குடும்பத்தினர் கூறியுள்ளனர். ஒருவருக்கு கொரோனா தொற்று பரிசோதித்து, பாதிப்பு இல்லை என மருத்துவர்கள் கூறியதை அடுத்து, கடந்த 16 நாட்கள் கழித்து திடீரென மாநகராட்சி அதிகாரிகள் முதியவருக்கு பரிசோதனையின் முடிவில் கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது என கூறுவது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.


Tags : coroner ,Chennai , Chennai, Bali, Corona, 16 day, Municipal Notice
× RELATED ஃபோர்டு நிறுவனம் சென்னையில் தனது...