×

இந்தியாவுக்கு பாதுகாப்பானவை அல்ல.. டிக் டாக் உள்ளிட்ட 52 சீன செயலிகளை தடை செய்யுங்கள் : மத்திய அரசிடம் தேசிய புலனாய்வு அமைப்புகள் கோரிக்கை

பெய்ஜிங் : சீனாவுடன் தொடர்புடைய 52 மொபைல் செயலிகளை தடை செய்யுமாறு மத்திய அரசிடம் தேசிய புலனாய்வு அமைப்புகள் கேட்டுக் கொண்டுள்ளன.கடந்த சில தினங்களுக்கு முன்னதாக லடாக் விவகாரத்தில் போருக்கு தயாராக இருங்கள் என சீன ராணுவத்தினருக்கு அந்த நாட்டு அதிபர் ஜின்பிங் எச்சரிக்கை விடுத்துள்ளார் என்ற செய்திகள் உலா வந்த வண்ணம் இருந்தனர். அதற்கேற்றாற் போலவே, போரின் முன்னோட்டமாக, எல்லையில் இந்தியா ராணுவத்தினர் மீது சீன ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. இதில், இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்துள்ளனர். பதில் தாக்குதலில் 48 சீன ராணுவ வீரர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.இந்த மோதலால் தற்போது இரு நாடுகளிடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. மேலும், இரு நாட்டு தலைவர்களும் மாறிமாறி, எச்சரிக்கைகளை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், மத்திய அரசிடம் தேசிய புலனாய்வு அமைப்புகள் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளன. அதாவது, சீனாவுடன் தொடர்புடைய 52 மொபைல் செயலிகளை தடை செய்யுமாறு பரிந்துரை செய்துள்ளது. இந்த செயலிகளின் மூலம் இந்தியா குறித்த பல தரவுகள் கடத்தப்பட வாய்ப்பிருப்பதாகவும், எனவே இந்த செயலிகள் இந்தியாவுக்கு பாதுகாப்பனவை கிடையாது என தெரிவித்துள்ளது. ஜும், வீடியோ செயலி, யுசி புரவுசர், ஷேர் இட், கிளீன் மாஸ்டர், xender, ஹலோ, டிக்டாக், பியூட்டி ப்ளஸ், கிளாஷ் ஆப் கிங்ஸ், மொபைல் லிஜெண்ட்ஸ், பிகோ லிவ் உள்பட 52 செயலிகளை தடை செய்ய வேண்டும் மத்திய அரசிடம் தேசிய புலனாய்வு அமைப்புகள் பரிந்துரை செய்துள்ளது.

தற்போது, இந்த பரிந்துரை மீது ஆலோசனை நடப்பதாகவும், இந்த செயலிகளின் மூலம் எந்த மாதிரியான ஆபத்து ஏற்படும் என்பது குறித்து ஒன்றன் பின் ஒன்றாக பரிசோதனை செய்யப்படும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.ஜூம் செயலி பாதுகாப்பானது அல்ல என கடந்த ஏப்ரலில் எச்சரித்த உள்துறை அமைச்சகம் அரசு துறைகளில் அது பயன்படுத்தப்படுவதில்லை எனவும் விளக்கம் அளித்தது. இந்த நிலையில் போர் என்று வந்தால் சீன செயலிகள் வாயிலாக எதிரிநாட்டின் தகவல் தொடர்பில் குழப்பங்களை ஏற்படுத்த முடியும் எனவும் கூறப்படுகிறது.

செயளிகளின் விவரம்

* TikTok, Vault-Hide, Vigo Video, Bigo Live, Weibo

* WeChat, SHAREit, UC News, UC Browser

* BeautyPlus, Xender, ClubFactory, Helo, LIKE

* Kwai, ROMWE, SHEIN, NewsCanine, Photo Wonder

* APUS Browser, VivaVideo- QU Video Inc

* Perfect Corp, CM Browser, Virus Cleaner (Hi Security Lab)

* Mi Community, DU recorder, YouCam Makeup

* Mi Store, 360 Security, DU Battery Saver, DU Browser

* DU Cleaner, DU Privacy, Clean Master – Cheetah

* CacheClear DU apps studio, Baidu Translate, Baidu Map

* Wonder Camera, ES File Explorer, QQ International

* QQ Launcher, QQ Security Centre, QQ Player, QQ Music

* QQ Mail, QQ NewsFeed, WeSync, SelfieCity, Clash of Kings

* Mail Master, Mi Video call-Xiaomi, Parallel Space

Tags : India ,Chinese ,National Intelligence Agency ,National Intelligence Bureau , India, Secure, Tic Tac, 52 Chinese Processor, Prohibition, National Intelligence Systems, Recommendation
× RELATED இந்தியா-சீனா இடையே வலுவான உறவு இரு...