×

கலெக்‌ஷன் குறைவாக இருப்பதாக அரசு போக்குவரத்து ஊழியர்களை தரக்குறைவாக பேசும் மேல்அதிகாரிகள்: மனஉளைச்சலில் தவிப்பதாக வேதனை

வாலாஜா:  கலெக்‌ஷன் குறைவாக இருப்பதாக அரசு போக்குவரத்து ஊழியர்களை மேல்அதிகாரிகள் தரக்குறைவாக பேசுகின்றனராம். இதனால் மனஉளைச்சலில் சிக்கி தவிப்பதாக ஊழியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். நாடு முழுவதும் கடந்த 3 மாதமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, போக்குவரத்து முடக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த மாதத்திலிருந்து ஒரு சில நிபந்தனைகளுடன் பஸ்கள் இயக்க அரசு அனுமதி அளித்தது. அதன்படி குறைந்தளவில் 32 பயணிகளை மட்டும் பஸ்சில் ஏற்றவும், பயணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிந்தும், ஒரு சீட்டில்  ஒருவர் மட்டுமே அமர்ந்து பயணிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை அரசு விதித்தது. இதேபோல் குறிப்பிட்ட தூரம் மட்டுமே உள்ளூர் டவுன் பஸ்களை இயக்க போக்குவரத்து முடிவு செய்தது அண்டை மாவட்டத்திற்கு கூட போக்குவரத்து செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதனை ஏற்று தனியார் மற்றும் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் இயக்கப்படும் அரசு பேருந்துகளில் கலெக்‌ஷன் குறைவாக இருப்பதாக கண்டக்டர், டிரைவர்களை  போக்குவரத்து மேல் அதிகாரிகள் தரக்குறைவாக பேசி வருவதாக போக்குவரத்து ஊழியர் சங்கத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், 32 பயணிகளிடம் வசூலிக்கப்படும் தொகை குறைவாக தான் இருக்கும். ஆனால் உயர் அதிகாரிகள் கலெக்‌ஷன் குறைவாக இருப்பதாக எங்களை தரக்குறைவாக பேசுவதால் நாங்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகிறோம் என்று வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, கொரோனா அச்சம் உள்ள நேரத்தில் பணிபுரியும் கண்டக்டர், டிரைவர்களை சந்தேகத்துடன் பார்க்காமல் அவர்களுக்கு பணிச்சுமை ஏற்றாமல் மக்களுக்கு சேவை செய்ய  ஊக்கப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : government transport workers ,Superintendents , Superintendents , public transport,collection , low, distress
× RELATED திண்டுக்கல்லில் ஒன்றிய அரசைக்...