×

திரைப்பட தயாரிப்பாளர் மாரடைப்பால் மரணம்

சென்னை: நடிகர் அருண் விஜய்யின் மாமனாரும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளருமான டாக்டர் என்.எஸ்.மோகன் (68), சென்னையில் நேற்று காலை மாரடைப்பால் மரணம் அடைந்தார். இவர் அருண் விஜய் நடித்த ‘வா டீல்’, ‘மாஞ்சா வேலு’, ‘மலை மலை’, ‘தடையறத் தாக்க’ ஆகிய படங்களை தயாரித்து இருக்கிறார். உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மோகன், சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். நேற்று மாலை அவரது இறுதிச்சடங்கு நடைபெற்றது. மோகனுக்கு மனைவி சுசில், மகன் ஹேமந்த், மகள் ஆர்த்தி உள்ளனர்….

The post திரைப்பட தயாரிப்பாளர் மாரடைப்பால் மரணம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Arun Vijay ,Dr NS Mohan ,
× RELATED சென்னை சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க மாநகராட்சி திட்டம்!