×

கொரோனா நெருக்கடியை இந்தியா வளர்ச்சிக்கான வாய்ப்பாக மாற்றிக் கொள்ளும் : நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஏலம் விடும் நிகழ்வில் மோடி பேச்சு!!

டெல்லி : சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் உள்ள 41 நிலக்கரி சுரங்கங்களை வர்த்தக சுரங்க பணிகளுக்கு ஏலம் விடும் நடைமுறையை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்தபடியே காணொளி மூலம் தொடங்கி வைத்தார். மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளில் 33 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு வரும்  என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் 70 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும், 2.10 லட்சம் பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

இதனிடையே ஏலத்தை தொடங்கி வைத்த பின் பிரதமர் மோடி உரை நிகழ்த்தினார். அதில், நிலக்கரி துறை வளர்ச்சிக்கு போடப்பட்ட பூட்டு இன்று உடைக்கப்பட்டுள்ளது என்றும் 41 நிலக்கரி சுரங்கங்களின் ஏலத்தால் 5 முதல் 7 ஆண்டுகளில் ரூ.33 ஆயிரம் கோடிக்கு முதலீடு வரும் என்றும் தெரிவித்தார். மேலும் அவர் கூறியாதவது, இறக்குமதியை குறைப்பது தான் சுயசார்பு இந்தியாவின் வெற்றி ஆகும்.நாடு தற்சார்புடன் இருக்க வேண்டும் என்ற பாடத்தை கொரோனா நமக்கு புகட்டி உள்ளது.தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா நெருக்கடியை வளர்ச்சிக்கான வாய்ப்பாக நாம் மாற்றிக் கொள்ள வேண்டும்.நம் இறக்குமதி செய்வதை உள் நாட்டிலேயே உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்வது தான் தற்சார்பு இந்தியா திட்டம்.

நிலக்கரி மற்றும் எரிசக்தி துறை மூலம் ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாகும்.வர்த்தக ரீதியில் நிலக்கரி உற்பத்தியை அனுமதிப்பதன் மூலம் இந்தியா மிகப்பெரிய நாடாக முடியும்.தற்போது உலகிலேயே அதிகளவு நிலக்கரியை இறக்குமதி செய்வதில் 2வது நாடாக இந்தியா உள்ளது.முந்தைய ஆட்சியில் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் வெளிப்படைத் தன்மை கடைபிடிக்கப்படவில்லை. சுரங்கங்களை தனியாருக்கு ஏலம் விடுவதன் மூலம் நிலக்கரி உற்பத்தியை முடக்கத்தில் இருந்து விடுவிக்க முடியும்.2014ம் ஆண்டுக்கு பிறகு சுரங்க ஏலத்தில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.நிலக்கரி ஏலத்தில் பல்வேறு மாற்றங்களை பாஜக ஆட்சி மேற்கொண்டுள்ளது. என்றார்.


Tags : India ,auction ,coronation crisis ,Modi ,corruption crisis , Coal, Mines, Private, Auction, Procedure, PM Modi, Job Opportunity
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!