×

தமிழ் திரைப்பட இயக்குனர் கொரோனாவுக்கு பலி

சென்னை: இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில், இயக்குனர்கள் கே.பாலசந்தர், பாரதிராஜா, ஆரி, அஞ்சலி இணைந்து நடித்த ‘ரெட்டச்சுழி’ என்ற படத்தை இயக்கியவர், எழுத்தாளர் தாமிரா சேக் தாவூத் (53). மேலும் சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியன் நடித்த ‘ஆண் தேவதை’ என்ற படத்தையும் அவர் இயக்கியுள்ளார். கே.பாலசந்தர் இயக்கிய பல டி.வி தொடர்களில் உதவி இயக்குனராக பணியாற்றியதுடன், கே.பாலசந்தர் இயக்கிய ‘பொய்’ என்ற படத்துக்கும் வசனம் எழுதியிருந்தார். இந்நிலையில், சில வாரங்களுக்கு முன்பு தாமிராவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், சென்னை அசோக் நகரிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். நுரையீரலில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டதால், சிகிச்சை பலனின்றி நேற்று காலை மரணம் அடைந்தார். இதையடுத்து அவரது உடல் திருநெல்வேலிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு இறுதிச்சடங்கு நடந்தது. தாமிராவுக்கு மனைவி பஷிரியா, மகன்கள் முகமது ராஷித், இர்ஷாத், ரிஷ்வான், மகள் பவ்ஷியா உள்ளனர்….

The post தமிழ் திரைப்பட இயக்குனர் கொரோனாவுக்கு பலி appeared first on Dinakaran.

Tags : Chennai ,Shankar ,K.Balachandar ,Bharathiraja ,Aari ,Anjali ,
× RELATED சவுக்கு சங்கர் தொடர்பான வழக்கை...