×

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பிரதோஷ வழிபாடு நிகழ்ச்சி நேரலையில் காண ஏற்பாடு

சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பிரதோஷ வழிபாட்டு நிகழ்ச்சி இன்று மாலை 4.30 மணி அளவில் நேரடியாக ஆன்லைன் மூலம் ஒளிபரப்பப்பட உள்ளது. பக்தர்கள் http://www.youtube.com/c/ MYLAPORE KAPALEESWARAR TEMPLE என்ற யூடியுப் சேனல் மூலம், இன்று மாலை 4.30 மணிக்கு நந்தி அபிஷேகமும், அதனை தொடர்ந்து பிரதோஷ நாயகர் அபிஷேகமும் நேரலை ஒளிபரப்பு மூலம், பக்தர்கள் பார்த்து தரிசிக்கலாம்.

இதேபோல் திருவொற்றியூர் தியாகராஜசுவாமி கோயில் பிரதோஷ நிகழ்ச்சியினை நேரடியாக ஒளிபரப்ப திட்டமிடப்பட்டுள்ளது. பக்தர்கள் https://www.youtube.com/c/Thiagarajaswamy Vadivudaiamman Temple Official என்ற யூடியுப் சேனல் மூலம், இன்று மாலை 4  மணிக்கு நந்தியம் பெருமான் அபிஷேகமும் அதனை தொடர்ந்து பிரதோஷ நாயகர் அபிஷேகமும் நேரலை ஒளிபரப்பப்படுகிறது.


Tags : Mayapur Kapaleeswarar Temple Pradosha , Mayapur Kapaleeswarar Temple, Pradosha worship
× RELATED மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பிரதோஷ வழிபாடு இன்று நேரடி ஒளிபரப்பு