×

பள்ளிகள் திறப்பு பற்றி முதல்வர் முடிவெடுப்பார்; 12-ம் வகுப்பு தேர்வு முடிவு ஜூலையில் வெளியீடு...அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

சென்னை: 12-ம் வகுப்பு தேர்வு முடிவு ஜூலை முதல் வாரத்தில் வெளியாகும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 24-ம் தேதி முடிவடைந்தது.  அன்றைய தேதி நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டாதால் 36,000 மாணவர்களால் தேர்வில் பங்கேற்க முடியவில்லை. அவர்களுக்கு மட்டும் பின்னர் மறுதேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜூன் 10-ம்  தேதியுடன் அனைத்து மையங்களிலும், 12-ம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் பணி முடிவடைந்தது.

தொடர்ந்து, விடைத்தாள்களின் மொத்த மதிப்பெண்களை ஆய்வு செய்து பட்டியல் தயாரிக்கப்படவுள்ளது. இந்த பணிகள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் ஒரு வார காலத்திற்குள் முடியும்  என்பதால் இந்த மாத இறுதியில், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேட்டியளித்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், 12-ம் வகுப்பு தேர்வு முடிவு ஜூலை முதல் வாரத்தில் வெளியிடப்படும் என்றும் மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் குறைப்பது குறித்த  பணி நடைபெற்று வருகிறது என்றார். தனியார் பள்ளிகள் கல்விக்கட்டணம் நிர்ணயம் செய்வது குறித்து விரைவில் முடிவ செய்யப்படும். தனியார் பள்ளிகள் 11-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை நடத்துவதாக புகார் வந்தால் கடும் நடவடிக்கை  எடுக்கப்படும் என்றார்.

தேர்வு எழுதாத மாணவர்கள் குறித்து தகவல் கேட்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக புத்தகங்கள் அச்சடிக்கும் பணி தாமதமாகி உள்ளது; இம்மாத இறுதிக்குள் புத்தகங்கள் தயாராகும். பள்ளிகள் திறப்பு பற்றி சூழ்நிலைக்கு ஏற்ப முதல்வர்  பழனிசாமி முடிவெடுப்பார் என்றும் தெரிவித்தார்.


Tags : Chief Minister ,opening ,schools ,Sengottaiyan , The Chief Minister decides on the opening of schools; 12th Grade Exam results released in July
× RELATED ராகுல் காந்தி முதல்வர் ஸ்டாலினுக்கு...