×

முழு ஊரடங்கு நேரத்தில் 4 மாவட்ட நீதிபதிகள் வீட்டிலிருந்தே வழக்குகளை விசாரிக்க ஐகோர்ட் தலைமை நீதிபதி உத்தரவு

சென்னை:  தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நாளை நள்ளிரவு முதல் வரும் 30ம் தேதிவரை முழு ஊரடங்கை அமல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. விலக்கு அளிக்கப்பட்டதில் நீதிமன்ற பணிகள் வந்தாலும், இந்த 4 மாவட்டத்திலும் மாவட்ட நீதிபதிகள் அவர்களின் வீடுகளில் இருந்தே வழக்கு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி தலைமையில் உயர் நீதிமன்ற நிர்வாக குழு கூட்டம் நேற்று நடந்தது. அப்போது, சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் உள்ள நீதிபதிகள் வழக்கு விசாரணை உள்ளிட்ட நீதிமன்ற பணிகளை அவர்களின் வீடுகளில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடத்த வேண்டும். இந்த 4 மாவட்டங்களில் உள்ள சிறப்பு நீதிமன்றங்களின் நீதிபதிகள் மட்டும் நீதிமன்றங்களுக்கு வர வேண்டும். அவர்களும் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்களை பணிக்கு அமர்த்தி நீதிமன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Tags : chief magistrate ,iCord ,district judges ,home ,curfew ,hearings ,Chief Justice ,Icourt , Icourt Chief Justice,ordered, cases , home,4 district judges during, full curfew
× RELATED உச்சநீதிமன்ற உத்தரவை மீறி தொழிலதிபரை...