×

மதிப்பெண் நிர்ணயிக்கும் வகையில் காலாண்டு, அரையாண்டு விடைத்தாளை தலைமை ஆசிரியர்கள் அளிக்க உத்தரவு

சென்னை: அரசுத்தேர்வுகள் துறை தேர்வுத்துறை இயக்குநர் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கான தேர்வுகள் எழுத பதிவு செய்த மாணவர்களுக்கு காலாண்டு மற்றும் அரையாண்டு  தேர்வுகளில் அவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் 80%  மதிப்பெண்கள் வழங்கப்பட வேண்டும். எனவே அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களும் தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து உயர்நிலை, மேனிலை பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவித்து மேற்கண்ட விடைத்தாள்களை அனுப்பி வைக்க அறிவுறுத்த வேண்டும். இதன்படி, காலாண்டு, அரையாண்டு தேர்வுகளின் விடைத்தாள்கள், மாணவர்களின் அசல் முன்னேற்ற அறிக்கைகள்(progress report), அசல் மதிப்பெண் பதிவேடுகள் ஆகியவற்றை சேகரிக்க வேண்டும்.

மாணவர்கள் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதுவதற்கும், பிளஸ் 1 தேர்வில் விடுபட்ட பாடங்களை  எழுதுவதற்கும் பதிவு செய்தவர்கள், பிளஸ்1 அரியர் வைத்துள்ளவர்கள் ஆகியோரின் முகப்புத் தாளை 17ம் தேதி முதல் 19ம் தேதி வரை இணைய தளம் மூலம் பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். இவற்றை அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்களின் ஒப்படைப்பதற்கு முன்னதாக தேர்ச்சி மதிப்பெண் வழங்க அனுப்பி வைக்கப்பட்டுள்ள படிவங்களில் அதில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்களை பின்பற்றி, மதிப்பெண்களை பதிவு செய்ய வேண்டும்.

Tags : headmasters , Directed ,issue quarterly, half yearly answers , the headmasters, determine , score
× RELATED ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 3 அரசு பள்ளி...