×

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தீ போல் பரவும் கொரோனா தொற்று: ஒரே நாளில் 56 பேர் பாதிப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டு 190 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். குன்றத்தூரைச் சேர்ந்த வெல்டர் உள்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரத்தை சேர்ந்த 17 பேர், வாலாஜாபாத்தில் 7, ஸ்ரீபெரும்புதூரில் 6, குன்றத்தூர், கோவூர் பகுதிகளில் தலா 5, மாங்காடு, படப்பை பகுதிகளில் தலா 3, அய்யப்பன்தாங்கலில் 2, மொளச்சூர், வெங்கடாபுரம், நந்தம்பாக்கம், பூந்தண்டலம், சிக்கராயபுரம், ஒரகடம், மாடம்பாக்கம், திருமுடிவாக்கம் பகுதிகளில் தலா1 என மொத்தம் 56 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியானது. இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 859 ஆக உயர்ந்துள்ளது.

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அம்பேத்கர் நகரை சேர்ந்த 26 வயது வாலிபருக்கு, கடந்த 3 நாட்களுக்கு முன் காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவர், கேளம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்ததில், கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து வாலிபரை, ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பினர். தொடர்ந்து, அவரது குடும்பத்தினருக்கு கொரோனா பரிசோதனை செய்து, வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கேளம்பாக்கத்தில் ஒருவர் பலி
கேளம்பாக்கம் அடுத்த தையூர் ஊராட்சி செங்கண்மால் கிராமம், ஈஸ்வரன் கோயில் தெருவை சேர்ந்தவர் 63 வயது முதியவர் கடந்த சில நாட்களாக அவர், கொரோனா தொற்றால், பாதிக்கப்பட்டு கேளம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர், அவரது உடல்நிலை அதிகளவு பாதிக்கப்பட்டதால், செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் இரவு இறந்தார். இதையடுத்து அவரது உடல் அரசு தரப்பில் நேற்று காலை தாம்பரம் அருகே எரியூட்டப்பட்டது.

Tags : Kanchipuram district ,deaths , Kanchipuram District, Corona
× RELATED கோடை வெப்ப நோய்களை எதிர்கொள்ள...