×

காற்றாலை தொழிற்சாலையில் தொழிலாளிக்கு கொரோனா

கும்மிடிப்பூண்டி: காற்றாலை தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளிக்கு கொரோனா தொற்று உறுதியானது. கும்மிடிப்பூண்டி அடுத்த சிப்காட் தொழிற்பேட்டையில் காற்றாலை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை உள்ளது. இதில் மீஞ்சூர், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, செங்குன்றம், சென்னை, ஆவடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து தினந்தோறும் 50க்கும் மேற்பட்ட நிரந்தர தொழிலாளர்கள்  வேலை செய்கின்றனர். இந்நிலையில்  தொழிற்சாலையில் மெக்கானிக்கல் டிபார்ட்மென்ட் மேலாளராக சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த 48 வயதுடைய தொழிலாளி பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் அவருக்கு  தனியார் மருத்துவமனையில் கொரொனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. கும்மிடிப்பூண்டி தாசில்தார் குமார் உத்தரவின்பேரில் கும்மிடிப்பூண்டி வட்டார மருத்துவ அலுவலர் கோவிந்தராஜ் உள்ளிட்ட மருத்துவக் குழுக்கள், எஸ்.ஆர்.கண்டிகை கிராம நிர்வாக அலுவலர் பிரபு உள்ளிட்டோர் விரைந்து சென்றனர். ஒவ்வொரு  தொழிலாளிக்கும் காய்ச்சல், இருமல் உள்ளிட்ட பரிசோதனை  செய்தனர். பின்பு மூன்று நாளைக்கு தொழிற்சாலை மூடப்படும் என மருத்துவக் குழுவினர் தெரிவித்தனர். பின்னர் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.


Tags : Corona ,windmill factory , Windmill factory, laborer, corona
× RELATED கரூர் நகரப்பகுதியில் கால்சியம்,...