×

ஆவடி மாநகராட்சியில் கொரோனா தொற்றுக்கு நடத்துனர் பலி: இதுவரை 17 பேர் உயிரிழப்பு

ஆவடி:  ஆவடி மாநகராட்சி பகுதியில் கொரோனா தொற்றுக்கு நாளுக்கு நாள் பாதிப்பு மற்றும் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, மாநகராட்சிக்கு உட்பட்ட ஆவடி, திருமுல்லைவாயல், பட்டாபிராம், கோவில்பதாகை, அண்ணனூர், மிட்டனமல்லி, முத்தாபுதுப்பேட்டை ஆகிய பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொற்று பாதிப்பு எண்ணிக்கை தினசரி 20வரை உயர்ந்து வருகிறது. இதனையடுத்து, நேற்று முன் தினம் இரவு வரை  தொற்றால் 420க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இவர்களில் 221பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், 180க்கும் மேற்பட்டோர் மருத்துவமனை மற்றும் வீடுகளில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு சார்ந்த சுமார் 55வயது மதிக்கத்தக்க மாநகர போக்குவரத்து கழக நடத்துனர் ஒருவர் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 15ந்தேதி சென்னை, ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது அவருக்கு சோதனை செய்ததில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். நடத்துனர் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதனையடுத்து ஆவடி மாநகராட்சியில் தொற்றால் 17பேர் உயிரிழந்துள்ளனர் குறிப்பிடத்தக்கது. இதனால் மாநகராட்சி பகுதியில் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.


Tags : deaths ,Coroner ,Awadhi Corporation , Awadhi Corporation, Corona, kills 17 people
× RELATED 10 ஆண்டுகளில் 4.25 லட்சம் பேர் தற்கொலை:...