×

மணிப்பூரில் கவிழ்கிறது பாஜ ஆட்சி மீண்டும் ஆட்சியமைக்கிறது காங்.?

இம்பால்: மணிப்பூரில் 3 பாஜ எம்எல்ஏ.க்கள் உள்பட 11 பேர் ராஜினாமா செய்துள்ளதால் அங்கு பாஜ ஆட்சி ஆட்டம் காணும் நிலை ஏற்பட்டுள்ளது. மணிப்பூரில் பிரேன் சிங் தலைமையிலான பாஜ கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. மொத்தம் 60  சட்டப்பேரவைத் தொகுதிகள் கொண்ட மணிப்பூரில், கடந்த 2017 தேர்தலின் போது 28 இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ் பெரும்பான்மை பலத்துடன் இருந்தது. ஆனால், 21 எம்எல்ஏ.க்களை மட்டுமே தன் வசம் வைத்திருந்த பாஜ, தலா 4 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த நாகா மக்கள் முன்னணி, தேசிய மக்கள் கட்சி, தலா ஒரு தொகுதியில் வெற்றி பெற்ற லோக் ஜனசக்தி, திரிணாமுல் காங்கிரஸ், சுயேச்சையுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்றியது.

இந்நிலையில், பாஜ எம்எல்ஏ.க்கள் 3 பேர் நேற்று தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இதையடுத்து, அதன் கூட்டணி கட்சிகளான தேசிய மக்கள் கட்சி எம்எல்ஏ.க்கள் 4 பேர், திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவர், சுயேச்சை எம்எல்ஏ ஒருவர் என 3 பாஜ எம்எல்ஏ.க்களை சேர்த்து மொத்தம் 9 எம்எல்ஏ.க்கள் பாஜ அரசுக்கு தெரிவித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றனர். இதனால், மணிப்பூரில் பாஜ கூட்டணி ஆட்சி கவிழும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், பாஜ.வில் இருந்து விலகிய 3 எம்எல்ஏ.க்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு, காங்கிரசில் இணைந்தனர். தற்போது, பாஜ.வுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்ற மற்ற 6 எம்எல்ஏ.க்களுடன் சேர்த்தால், காங்கிரசின் பலம் 34 உயர்கிறது. இதனால், ஆட்சியை அமைப்பதற்கான பெரும்பான்மை அது பெற்றுள்ளதால், அடுத்த ஆட்சி அமைக்க அக்கட்சி தீவிரமாக முயற்சிக்கும் என தெரிகிறது.

பேரவையில் கட்சிகள் பலம்
மொத்த இடங்கள்    60
காங்கிரஸ்        28
பாஜ        21
நாகா மக்கள் முன்னணி    4
தேசிய மக்கள் கட்சி    4
திரிணாமுல் காங்கிரஸ்    1
லோக் ஜனசக்தி    1
சுயேச்சை        1


Tags : Bajaj ,Manipur BJP ,Manipur , Manipur, BJP rule, Congress
× RELATED உத்தரகாண்டில் இடிந்து விழுந்த சுரங்க...