×

மாநிலங்களுக்கு இடையில் தொழில் ரீதியாக சென்று வர தடையில்லை

* உடனே கொரோனா சோதனை கிடையாது
* தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டத்துக்கு கார், வேன், பஸ் உள்ளிட்ட வாகனங்களில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு செல்வதாக இருந்தால் கூட அதற்கான காரணங்களை கூறி, இ பாஸ் பெற வேண்டும். அதில், முக்கியமாக மருத்துவம், திருமணம், இறப்பு உள்ளிட்ட காரணங்கள் தொடர்பாக உரிய ஆவணங்களை சமர்ப்பித்தால் மட்டுமே இ-பாஸ் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால், தொழில் ரீதியாக அடிக்கடி பயணம் மேற்கொள்வோர், ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டங்களுக்கும், மாநிலங்களுக்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் அவர்கள் இ-பாஸ் கேட்டு விண்ணப்பித்தாலும் அவர்களுக்கு கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசுக்கு பல்வேறு தரப்பிலும் கோரிக்கை வந்தது. இதை தொடர்ந்து, மாநிலங்களுக்கு இடையே தொழில் ரீதியான போக்குவரத்துக்கு தடை ஏதும் இல்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசின் தலைமை செயலாளர் சண்முகம் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: மாநிலங்களுக்கு இடையே தொழில் ரீதியாக செல்வோருக்கு தடையில்லை. ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு தொழில் ரீதியாக பயணம் மேற்கொள்ளவும் எந்தவித தடையும் இல்லை. மாநிலங்களுக்கு இடையில் பயணம் மேற்கொள்வோர் 48 மணி நேரத்தில் திரும்பினால் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள தேவையில்லை கட்டுபடுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து வருவோருக்கு தடை உத்தரவு தொடரும்.



Tags : states , no barrier ,between, states, professionally
× RELATED இஸ்ரேல் மீது ட்ரோன், ஏவுகணை தாக்குதலை தொடங்கியது ஈரான்