×

மணிப்பூரில் பாஜக ஆட்சிக்கு சிக்கல்: ஆட்சி கவிழ வாய்ப்பு

மணிப்பூர்: மணிப்பூர் மாநிலத்தில் 3 பாஜக எம்எல்ஏக்கள் கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்தனர். பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் 3 பேர் காங்கிரசில் இணைந்ததால் மணிப்பூரில் பாஜக ஆட்சிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. பாஜகவுக்கு ஆதரவு அளித்து வந்த சுயேச்சை எம்எல்ஏ உள்பட 6 பேர் ஆதரவை திரும்ப பெற்றனர். 9 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் ஆதரவை திரும்ப பெற்றதால் பாஜக ஆட்சி கவிழ வாய்ப்பு உள்ளது. 


Tags : BJP ,Manipur , Manipur, BJP rule, trouble
× RELATED மணிப்பூர் பாஜ தலைவர் காங்கிரசில் இணைந்தார்