×

108 ஆம்புலன்ஸ் டிரைவர் பணிக்கு திரண்ட இளைஞர்கள் சமூக இடைவெளியை மறந்து நின்றதால் பரபரப்பு

நாகர்கோவில்: நாகர்கோவிலில் 108 ஆம்புலன்ஸ் பணிக்கு திரண்ட இளைஞர், இளம்பெண்கள் சமூக இடைவெளியை மறந்து நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது. நாகர்கோவில் கோட்டார் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் வைத்துல் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர், அவசரகால மருத்துவ உதவியாளர் ஆகிய பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு கடந்த 15ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் நாளில் மருத்துவ உதவியாளர் பணிக்கு தேர்வு நடைபெற்றது. இதில் பெண்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதன் தொடர்ச்சியாக இன்று ஓட்டுநர் பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வுக்கு இன்று காலையில் ஏராளமான இளைஞர்கள் திரண்டனர்.

அவர்கள் கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரி வளாகத்தில் திரண்டிருந்த நிலையில் அவர்கள் சமூக இடைவெளியை பின்பற்றால் கூட்டமாக நின்றிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை ஒழுங்கு படுத்தவும் யாரும் ஆர்வம் காட்டவில்லை. குமரி மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் மாவட்ட நிர்வாகம் சமூக இடைவெளியை பின்பற்றிட வேண்டும் என்று தினமும் உத்தரவு பிறப்பித்து வரும் நிலையில் அதனை மருத்துவம் சார்ந்த பணிகளில் ஈடுபட இருக்கின்றவர்களே பின்பற்றாமல் இருப்பது கேள்விகளை எழுப்பியுள்ளது.



Tags : Ambulance Driver , 108 Ambulance, Youth, Social Gap
× RELATED ஆம்புலன்ஸ் டிரைவரை தாக்கிய 3 வாலிபர்கள் கைது