×

கோவை வாளையார் அருகே ஊருக்குள் புகுந்த காட்டு யானை: கும்கி உதவியுடன் விரட்டியடிப்பு

பாலக்காடு: கோவையை அடுத்த வாளையார் அருகே ஊருக்குள் புகுந்த காட்டு யானை, கும்கி யானைகள் உதவியுடன் காட்டுக்குள் விரட்டியடிக்கப்பட்டது. கேரள- தமிழக எல்லையான வாளையார் காட்டு பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று வாளையார், கஞ்சிக்கோடு, மலம்புழா, ஆரங்கோட்டுக்குழம்பு ஆகிய இடங்களில் கடந்த சில நாட்களாக விவசாய பயிர்களை சேதப்படுத்தி வந்தது. இந்த யானையின் அட்டகாசத்தால் ஊர்மக்கள் பீதியடைந்து வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலையில் இருந்தனர்.

இந்த யானையை வனத்திற்குள் விரட்ட வேண்டும் என பொதுமக்கள், வனத்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து கோணி என்ற ஊரில் இருந்து நேற்று கும்கி யானைகளை வரவழைக்கப்பட்டு காட்டு யானையை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். காட்டு யானை அங்குள்ள ரயில்வே தண்டவாளம் வழியாக வனத்திற்குள் விரட்டியடிக்கப்பட்டது. காட்டு யானை விரட்டப்பட்டதால் இப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Tags : city ,Kumki ,Coimbatore , The coyote, the wild elephant, the chase
× RELATED கோவையில் பட்டா மாறுதல் செய்ய மோசடி