×

கன்னியாகுமரியில் கடல் சீற்றம்: கரையை மோதும் ராட்சத அலைகள்

கன்னியாகுமரி: சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில், தற்போது கொரோனா அச்சம் காரணமாக சுற்றுலா பயணிகள் வருகை இல்லை. இதனால் எப்போதும் களைகட்டும் கன்னியாகுமரி வெறிச்சோடி காணப்படுகிறது. ேமலும் விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஒருசில கடைகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன. அவற்றிலும் வியாபாரம் டல்லடித்து வருகிறது.

கடற்கரையை அழகுபடுத்தும் வகையில் ரூ.9 கோடி ெசலவில் வளர்ச்சி பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் இன்று கன்னியாகுமரியில் கடல் சீற்றம் அதிகம் காணப்பட்டது. ராட்சத அலைகள் எழுந்து கரை மற்றும் பாறைகள் மீது மோதி தெறிக்கின்றன. கடும் கடல் சீற்றம் காரணமாக கடற்கரையில் வளர்ச்சி பணிகளை செய்ய முடியாமல் தொழிலாளர்கள் வேடிக்கை பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

Tags : shore ,Kanyakumari ,Giant , Virgo, sea rage, giant waves
× RELATED கன்னியாகுமரி – காரோடு நான்கு...