×

ரயிலில் பயணசீட்டு இல்லாமல் பயணிப்பது, பிச்சை எடுப்பது உள்ளிட்ட சிறு குற்றங்களுக்கு சிறை தண்டனையை நீக்க ரயில்வே முடிவு!

டெல்லி: ரயிலில் பயணசீட்டு இல்லாமல் பயணிப்பது, பிச்சை எடுப்பது உள்ளிட்ட பல்வேறு சிறு குற்றங்களுக்கு சிறை தண்டனை விதிக்கும் சட்டப்பிரிவுகளை நீக்குவதற்கு அரசு திட்டமிட்டு வருகிறது. ரயில்களில் பயணசீட்டு இல்லாமல் பயணித்தால் இனி அபராதம் மட்டுமே செலுத்தும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நீதிமன்றங்களுக்கு வரும் வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக்கையாக ஒவ்வொரு துறைகளிலும் உடனடி அபராதம் மட்டும் விதிக்கக்கூடிய வகையிலான குற்றங்களுக்கு சிறை தண்டனை வழங்கும்  பிரிவுகளை நீக்குவதற்காக அவற்றை அடையாளம் காணும்படி அமைச்சரவை செயலகம் கேட்டுக் கொண்டுள்ளது. இந்தியாவில் சிறு குற்றங்களுக்கும் அபராதம், சிறை அல்லது இரண்டும் என்ற தண்டனை நடைமுறையில் உள்ளது.

சிறு குற்றங்களுக்கு இது அதிகபட்ச தண்டனை என்ற கருத்து பல காலமாக நிலவி வருகிறது. அந்த வகையில் ரயில்களில் பயணசீட்டு இல்லாமல் பயணித்தால் இனி அபராதம் மட்டுமே செலுத்தும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ரயில்வே சட்டப்படி பயணசீட்டு இல்லாமல் பயணிப்பதும், ரயிலில் பிச்சை எடுப்பதும், படிக்கெட்டில் தொங்கிக் கொண்டு பயணிப்பதும் அபராதம் அல்லது சிறை தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படுவதற்குரிய குற்றங்கள் ஆகும். இவற்றுடன் காரணம் இன்றி, அபாய சங்கிலியை இழுப்பது, பொது மக்களுக்கு தொந்தரவு ஏற்படுத்துவது உட்பட 16 பிரிவுகளுக்கு சிறை தண்டனை விதிப்பதை தவிர்த்து விடலாம் என ரயில்வே அமைச்சகம் அடையாளம் கண்டுள்ளது.

Tags : Railway , Rail, ticketing, begging, petty crime, imprisonment, railway
× RELATED மதுரை ரயில் நிலையம் வெளியே தாயுடன்...