×

கொரோனா பாதிப்பு கைமீறிச் சென்றுவிட அரசு விட்டுவிடவில்லை; நாட்டில் பாதிப்பை விட தொற்றிலிருந்து குணமடைவோர் அதிகம்: பிரதமர் மோடி பேச்சு

டெல்லி: கொரோனா பாதிப்பு கைமீறிச் சென்றுவிட அரசு விட்டுவிடவில்லை; கொரோனவில் இருந்து குணமடைவோர் விகிதம் அதிகரித்து வருகிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்துவது தொடர்பாக 21 மாநில முதல்வர்கள், துணை நிலை ஆளுநர்களுடன் பிரதமர் மோடி நேற்று வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்துரையாடினார். இதைத் தொடர்ந்து 2ம் கட்டமாக, கொரோனா பாதிப்பு அதிகமுள்ள தமிழகம் உட்பட 15 மாநில முதல்வர்களுடன் இன்று வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார்.

அப்போது; கல்வான் பள்ளத்தாக்கில் சீனா நடத்திய தாக்குதலில் வீரமரணம் அடைந்த 20 ராணுவ வீரர்களுக்கு பிரதமர் மோடி 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினார். இதனை தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி; சரியான நேரத்தில் தொடர்புகளை அறிந்து மருத்துவம் செய்ததால் கொரோனா பரவல் குறைந்துள்ளது. கொரோனா பாதிப்பு கைமீறிச் சென்றுவிட அரசு விட்டுவிடவில்லை. குறைவான நோயாளிகளுக்கு மட்டுமே வெண்டிலேட்டர் சாதனம் தேவைப்படும் நிலை உள்ளது. மருத்துவர்களுக்கான ஒரு கோடி பாதுகாப்பு உடைகள் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 900 ஆய்வகங்கள் மூலம் கொரோனா வைரஸ் பரிசோதனை நடைபெறுகிறது. மாநிலங்களும், உள்ளாட்சி மன்றங்களும் கடுமையாக போராடி கொரோனாவை கட்டுப்படுத்தி உள்ளன. கொரோனா தொற்று பரவாமல் மருத்துவர்களும் முன்கள வீரர்களும் தடுத்துவிட்டனர். மாநில அரசுகளின் நடவடிக்கையால் நாட்டில் ஒவ்வொரு குடிமகனுக்கும் கொரோனா பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊரடங்கின் போது நாட்டு மக்களின் ஒத்துழைப்பால் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான முடிவுகளால் வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையை விட குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது எனவும் கூறினார்.


Tags : government ,Modi ,Corona , Corona prevalence, heal most, PM Modi
× RELATED விவேகானந்தர் மண்டபத்தை பிரதமர் மோடி...