×

இனி ஒரு முன்களப்பணியாளரையோ, அரசு ஊழியரையோ இழக்கும் நிலை ஏற்படக்கூடாது : முதல்வரின் தனிச் செயலர் மறைவிற்கு ஸ்டாலின் இரங்கல்!!

சென்னை : முதல்வரின் தனிச்செயலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததற்கு திமுக தலைவர் ஸ்டாலின் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். மருத்துவர்கள், அரசுப் பணியில் உள்ள யாரையும் நாம் இழக்கக்கூடாது என அவர் இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார். தலைமைச் செயலகம், பொதுத் துறை, முதலமைச்சர் அலுவலகப் பிரிவில் முதுநிலை தனிச் செயலராகப் பணியாற்றி வந்த தாமோதரன் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். ஆனால் இன்று சிகிச்சை பலனின்றி தாமோதரன் உயிரிழந்துவிட்டார்.

இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,“முதல்வர் அலுவலக தனிச் செயலாளர் தாமோதரன் கரோனாவால் மறைவெய்தி இருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது. அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். தலைமைச் செயலகம் உள்ளிட்ட மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும். காவல்துறையினர், மருத்துவர்கள், செவிலியர்கள், மக்கள் நல்வாழ்வுத் துறை ஊழியர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் உள்பட கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் முழு பாதுகாப்பு ஏற்பாடுகளும், சுய பாதுகாப்பிற்கு தேவைப்படும் மருத்துவ உபகரணங்களும் வழங்கிட வேண்டும் எனவும், இனி ஒரு முன்களப் பணியாளரையோ, அரசு ஊழியரையோ இழக்கும் நிலை ஏற்படக்கூடாது என்றும் வலியுறுத்துகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

Tags : Stalin ,disappearance ,death , Foreman, civil servant, loser, status, chief minister, private secretary, stalin, condolence
× RELATED இந்த தேர்தல் மூலம் யார் சரியானவர்,...