×

வனத்துறை உயரதிகாரிகளுக்கு தெரிவிக்காமல் யானையை எரித்தது ஏன்?

 * விசாரணைக்கு மூவர் குழு அமைப்பு
 * எலும்பு, சதை மாதிரிகள் சேகரிப்பு

பேரையூர்: மேற்குத் தொடர்ச்சி மலை வனப்பகுதியில் எரிக்கப்பட்ட யானை உடலில் இருந்த எலும்புகள், சதைகளை சேகரித்து வனத்துறையினர் ஆய்வு செய்தனர். சம்பவம் தொடர்பாக விசாரிக்க 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம், பேரையூர் தாலுகா, மேற்குத்தொடர்ச்சி மலையில் சாப்டூர் வனச்சரகத்தில் உள்ள நீர்வரத்து பாதையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு யானை இறந்து கிடந்தது. வனத்துறை உயரதிகாரிகளுக்கு தகவல் கொடுக்காமல், இறந்த யானையை எரித்ததாக சாப்டூர் வனச்சரக வனக்காப்பாளர் சீனிவாசன், வனவர் முத்துகணேசன், வனக்காவலர் நாராயணன் மற்றும் வனக்காவல் உதவியாளர் நஷீம்முனிஷா ஆகிய 4 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இதற்கிடையே சாப்டூர் வனப்பகுதி பொறுப்பு அதிகாரியாக வத்திராயிருப்பு ரேஞ்சர் கோவிந்தன் நியமிக்கப்பட்டார். திருவில்லிபுத்தூரில்  இருந்து சாப்டூர் வந்த அதிகாரிகள் நேற்று யானை எரிக்கப்பட்ட இடத்திற்கு சென்று தடயங்கள் ஏதும் கூடுதலாக கிடைக்கிறதா என்பது குறித்து ஆய்வுகளை  மேற்கொண்டனர். அப்போது, யானையை எரித்த இடத்திலிருந்து, யானையின் உடலில் இருந்த எலும்புகள் மற்றும் சதைகளை சேகரித்து வந்துள்ளனர். அந்த எலும்புகள் மற்றும் சதை ராமநாதபுரம் அல்லது ஐதராபாத் பரிசோதனைக்கூடத்திற்கு ஆய்வுக்காக அனுப்பப்படும். அதன் பின்பு யானை எப்படி இருந்தது? நோய்வாய்ப்பட்டு இறந்ததா அல்லது கொல்லப்பட்டதா என்பது குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளனர்.

மேலும் யானை எரிக்கப்பட்டது தொடர்பாக உயரதிகாரிகளுக்கு, வனத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவிக்காதது தொடர்பான விசாரணைக்காக, ஏ.சி.எப் அல்லிராஜ் என்பவர் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழு
அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் விசாரணை மேற்கொண்டு, விரைவில் வனத்துறை உயரதிகாரிகளுக்கு அறிக்கை தாக்கல் செய்வார்கள் என வனத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். யானையின் எலும்புகள் மற்றும் சதை ராமநாதபுரம் அல்லது ஐதராபாத் பரிசோதனைக்கூடத்திற்கு ஆய்வுக்காக அனுப்பப்படும். அதன் பின்பு யானை எப்படி இருந்தது? நோய்வாய்ப்பட்டு இறந்ததா அல்லது கொல்லப்பட்டதா என்பது குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளனர்.

Tags : forest officials , elephant burn,elephant , informing,forest officials?
× RELATED சிறுவாணியில் உடல்நலம் குன்றிய பெண் யானை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு