×

போடி பகுதியில் அறுவடை விலை இல்லாத வெள்ளைச் சோளம்: விவசாயிகள் கவலை

போடி: போடி பகுதியில் பல்வேறு கிராமங்களில் நான்கு மாதத்தில் பலனுக்கு வந்த வெள்ளைச்சோளம் அறு வடை தீவிரமாக நடந்து வருகிறது. கொரோனாவால் விலை இல்லாததால் விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர். போடி பகுதியில் முக்கிய ஊர் களான மேல சொக்கநாதபுரம், அம்மாபட்டி. சுந்தரராஜபுரம், மீனாட்சிபுரம், விசுவாசபுரம், டொம்புச்சேரி, காமராஜபுரம், உப்புக்கோட்டை, நாகலாபுரம், சங்கராபுரம், ராசிங்கபுரம், சிலமலை, சில்லமரத்துப்பட்டி, கோடங்கிபட்டி, மீனா விலக்கு, தோப்புப்பட்டி, அணைக்கரைப்பட்டி போன்ற பல்வேறு கிராமங்களில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் கடந்த மாசி மாதம் நிலங்களைப் பண்படுத்தி வெள்ளைச் சோளம் பயிரிட்டனர். களையெடுப்பு, உரம், மருந்தடிப்பு போன்ற பராமரிப்புச் செலவுகள் ஏக்கருக்கு 60 வயதிற்கு மேல் செலவு செய்துள்ளனர்.

போடி குரங்கணி மலை பகுதியில் உற்பத்தியாகி வரும் கொட்டகுடி ஆற்றில் வரும் தண்ணீரை பல்வேறு கண்மாய், குளங்களில் நிரப்பி நிலத்தடி நீரை உயர்த்தி கிணறு மற்றும் ஆழ்குழாய் பாசனத்தில் தொடர் விவசாயம் செய்து வருகின்றனர்.கடும் சிரமங்களின் அடிப்படையில் விவசாயிகள் தற்போது 120 நாட்களை தாண்டி சோளக் கதிர்களாக விளைவித்து தயார் நிலையில் வைத்ததால் அறுவடைக்கு வந்து சேர்ந்தது.இதில் அறுவடை இயந்திரங்களை விவசாயிகள் வரவழைத்து மீனாட்சிபுரம் பகுதிகளில் விரைவாகவும் தீவிரமாகவும் வெள்ளைச் சோளம் அறுவடை நடந்து வருகிறது வருகிறது.வெள்ளைச் சோளம் களத்துப் பகுதியில் குவித்து தரம் பிரித்து மூடைகளை மாற்றி மதுரைக்கு அனுப்பும் பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.  

 ஒரு குவின்டால் வெள்ளைச் சோளம் கடந்த அறுவடையின்போது 2 ஆயிரம் ரூபாய்க்கு கொள்முதல் செய்தனர்.தற்போது கொரோனாவால் விவசாயிகள், வியாபாரிகள் என பல வழிகளில் பழுதுபட்டதால் போக்குவரத்து குறைந்துள்ள நிலையில் குவிண்டால் 1500 ஆக குறைந்து விட்டது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர். உற்பத்தி செய்த விலைக்கும் விலை கிடைக்காததால் விவசாயிகளுக்கு அடி மேல் அடி அடி விழுந்து நஷ்டத்தை சந்திக்கும் நிலை இருப்பதால் மேலும் மனம் உடைந்துள்ளனர். அரசு சலுகைகளை செய்து கொடுத்தால் பற்றாக்குறை இன்றி உணவு உற்பத்தியை பாதுகாப்பாக  செய்ய ஏதுவாக இருக்கும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : area ,Bodi , Non-harvesting ,white corn, Bodi area,farmers' concern
× RELATED போடி அருகே வேகத்தடைகளில் வண்ணம் பூசும் பணி விறுவிறு