×

கோவையில் கொரோனா வைரஸை கொல்லும் ரசாயனத்துடன் வடிவமைக்கப்படும் முகக்கவசங்கள்: ரூ.49க்கு விற்பனை!

கோவை: கோவையில் கொரோனா வைரஸை கொல்லும் ரசாயனத்துடன் முகக்கவசங்கள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. 49 ரூபாயில் வைரஸை கொல்லும் முகக்கவசம் கோவையில் தயாரிக்கப்பட்டு வருகிறது. கோவை காரணம்பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும், சிவா டெக்சியன் நிறுவனம் டெக்னிகள் டெக்ஸ்டைல் துறையில் பல்வேறு தயாரிப்புகளுக்கு பெயர்பெற்றது. தற்போது இந்நிறுவனம் ஆன்டி வைரல் கெமிக்கல் கொண்ட துணியை தயாரித்துள்ளது. இந்த துணியை கொண்டு முதல்கட்டமாக வைரசை கொல்லும் தன்மை கொண்ட முகக்கவசங்களை உற்பத்தி செய்கிறார்கள். 49 ரூபாய்க்கு இந்த முகக்கவசம் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்று அந்நிறுவனம் உறுதி அளித்துள்ளது. ஆன்டி வைரல் கெமிக்கல் கொண்ட முகக்கவசத்தை அனைத்து வயதினரும் பயன்டுத்தலாம். சுவாச பிரச்சனை இருக்காது என்று கூறும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சுந்தர் ராமன், சலவை செய்தாலும் வைரஸை கொல்லும் ரசாயனம் செயல்படும் என்று உறுதி அளிக்கிறார்.

கொரோனா வைரஸை கொல்லும் தன்மை கொண்டவை என்று விரைவில் இந்த முகக்கவசங்கள் சான்றிதழ் பெற இருப்பதாக நிர்வாக இயக்குனர் கூறுகிறார். அமேசான், பிலிப் கார்ட் போன்ற ஆன்லைன் தளங்களிலும் இந்த 49 ரூபாய் மாஸ்க் விற்பனைக்கு கொண்டுவரப்படும் என்று தெரிகிறது. நாடு முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் எனும் நோய் அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸின் தாக்கம் பல்வேறு நாடுகளையும் துன்புறுத்தி வருகின்றது. இதனை கட்டுக்குள் கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. தற்போது கொரோனா வைரஸிடம் இருந்து தம்மை தற்காத்துக்கொள்ள முகக்கவசம் என்பது இன்றியமையாத ஒன்றாகவே கருதப்படுகிறது. அதிகாரிகளும் முகக்கவசங்களை அணியாமல் வெளியே செல்ல கூடாது என்று எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். தொடர்ந்து, ஆங்காங்கே போலியான முகக்கவசங்களும் விற்பனை செய்யப்பட்டு தான் வருகிறது. இந்நிலையில் கோவையில் கொரோனா வைரஸை கொல்லும் ரசாயனத்துடன் முகக்கவசங்கள் வடிவமைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Tags : Goa , Covina, corona virus, chemical, mask
× RELATED கோவையில் ஓட்டுக்கு ரூ.2000 பிடிபட்ட பாஜ நிர்வாகி