×

'பிளாஸ்மா'செல்களில் உள்ள 'Y வடிவ'புரதம் : கொரோனா சிகிச்சையில் புரட்சியை உண்டாக்கும் அமெரிக்க விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு

வாஷிங்டன் : அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களை குணப்படுத்த புதிய சிகிச்சைமுறையை அந்நாட்டு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த புதிய சிகிச்சை முறையை அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம், லாஜோல்லா நகரில் உள்ள ஸ்கிரிப்ஸ் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த ஆராய்ச்சி பற்றிய கட்டுரை  ‘சயின்ஸ்’ பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது. முள்ளை முள்ளால் எடுப்பது போல, கொரோனாவுக்கு கொரோனாவில் இருந்தே ஒரு சிகிச்சை முறையை அமெரிக்க விஞ்ஞானிகள் அறிமுகப்படுத்தியுள்ளனர்.  

அதாவது, கொரோனா வைரஸ் தொற்று பாதித்த நோயாளிகளின் ரத்தத்தில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான பாதுகாப்பை அளிக்கும் ‘ஆன்டிபாடி’களை (நோய் எதிர்ப்பு பொருள்) விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த ‘ஆன்டிபாடி’க்கு பெயர் தான் இம்யுனோகுளோபுலின். இது, ரத்தத்தில் உள்ள பிளாஸ்மா செல்களால் உருவாக்கப்படுகிற ‘ஒய்’ வடிவ புரதம் ஆகும். இந்த ‘ஒய்’ வடிவ புரதத்தை கொண்டு, பாக்டீரியா அல்லது வைரஸ் போன்ற நோயை உருவாக்குகிற பெளிப்பொருட்களை அடையாளம் கண்டு அழிக்கவோ அல்லது செயலற்றதாகவோ ஆக்க முடியும்.

இது அப்படியே கொரோனா நோயாளிகளுக்கும் பொருத்தமாக இருக்கும் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.இத்தகைய ‘ஆன்டிபாடி’களை ஊசி வழியாக கொரோனா வைரஸ் பாதிப்பில் ஆரம்ப நிலையில் உள்ள நோயாளிகளுக்கு செலுத்தலாம். இதன்மூலம் அவர்களுக்கு கொரோனா வைரஸ் அளவு குறையும், நோய் கடுமையாவது தடுக்கப்படும் எனக் குறிப்பிடுகின்றனர். இந்த ‘ஆன்டிபாடி’களை உயிரியல் தொழில் நுட்ப முறைகளைப் பயன்படுத்தி ஏராளமாக தயாரித்து, கடுமையான நோயைத்தடுக்கும் ஒரு சிகிச்சையாகவும், நோய்த்தொற்றில் இருந்து பாதுகாக்கும் தடுப்பூசியாகவும் பயன்படுத்த முடியும் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Tags : scientists ,American , Plasma, Cells, Y Shape, Protein, Corona, Treatment, Revolution, American Scientists, Discovery
× RELATED ஹைப்பர் சோனிக் அதிவேக ஏவுகணை சோதனை...