×

இந்தியா -சீனா இடையேயான மோதலால் போர் மூளும் அபாயம்; பிரச்சனை குறித்து விவாதிக்க அனைத்து கட்சி தலைவர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு...!

டெல்லி: இந்தியா-சீனா இடையே ஏற்பட்டுள்ள பிரச்சனை குறித்து விவாதிக்க அனைத்து கட்சி தலைவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். இந்தியா- சீனா 3,488 கிமீ தூர எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன. இதில் பல இடங்களில் இரு நாட்டு எல்லை சரியாக நிர்ணயிக்கப்படாததால் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், சுமார் 6 வாரங்களாக லடாக் எல்லையில் பதற்றம் நிலவி வரும் நிலையில் நேற்று முன்தினம் இரவு கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய, சீனா  ராணுவத்தினர் இடையே மீண்டும் பயங்கர கைகலப்பு ஏற்பட்டது.

இதில் இரு நாட்டு வீரர்களும் கற்களை வீசி தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்த பயங்கர மோதலில் இரு தரப்பிலும் உயிர் பலி ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில், தமிழக வீரர் உட்பட 20 இந்திய ராணுவத்தினர் பலியாயினர். மேலும் 4  இந்திய வீரர்கள் கவலைகிடமாக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்திய ராணுவத்தினர் நடத்திய பதில் தாக்குதலில் சீன படையில் பலி மற்றும் படுகாயம் அடைந்தோர் சேர்த்து 43 பேர் என கூறப்படுகிறது. 45 ஆண்டுக்குப் பிறகு  இந்தியா - சீனா ராணுவம் இடையேயான மோதலில் உயிர் பலி ஏற்பட்டுள்ளதால் போர் மூளும் அபாயம் நிலவி வருகிறது.

இதற்கிடையே, லடாக் எல்லை ஏற்பட்ட மோதல் குறித்து மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் மற்றும் ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவற்றின் தளபதிகள் மற்றும்  வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து ராஜ்நாத் சிங், பிரதமர் மோடியை சந்தித்து விளக்கினார். பின்னர் மீண்டும் பிரதமர் மோடி உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட மூத்த  அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், லடாக் எல்லை ஏற்பட்ட மோதல் குறித்து விவாதிக்க அனைத்து கட்சி தலைவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில், இந்தியா-சீனா எல்லையில் ஏற்பட்டுள்ள பிரச்சனை குறித்து விவாதிக்க நாளை மறுநாள் ஜூன் 19-ம் தேதி மாலை 5 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டம் காணொலி கட்சி மூலம் நடைபெறும் என்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்பார்கள் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அனைத்து கட்சி கூட்டத்தில் எல்லை பிரச்சனை தொடர்பாக ஆலோசனைகளை பிரதமர் மோடி கேட்டறியவுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜூத் தோவல் உள்ளிட்டோர் பிரதமர் மோடியுடன் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது..

சீனா பேச்சுவார்த்தைக்கு அழைப்பு;

சீன நாட்டின் வெளியுறவுத்துறை அதிகாரி இன்று செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது எல்லை பிரச்சினைக்கு பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண வேண்டும் என  இந்தியாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இனி எந்த ஒரு மோதலையும் சீனா விரும்பவில்லை என்றும் தூதரக ரீதியிலும் ராணுவ ரீதியிலும் சமரச முயற்சி நடைபெற்று வருகிறது என தெரிவித்துள்ளார். நடந்த சம்பவங்களில்  எது சரி, எது தவறு என்பதில் சீன அரசு தெளிவாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Tags : war ,Modi ,China ,India ,party leaders , The danger of war between India and China; PM Modi invites all party leaders to discuss the issue ...!
× RELATED இரண்டாம் உலகப் போரின்போது சியாம்...