×

மகள் திருமணத்திற்கு செல்ல எஸ்ஐ குடும்பத்திற்கு இ-பாஸ் மறுப்பு

பெரம்பூர்: சென்னை கொளத்தூரில் குடும்பத்துடன் வசித்து வருபவர் சந்திரசேகரன். இவர், சென்னை காவல் கட்டுப்பாட்டு அறையில் எஸ்ஐயாக பணியாற்றி, கடந்த ஜூன் மாதம் ஓய்வு பெற்றவர். இவரது மகள் காயத்திரிக்கும், விருதுநகர் மாவட்டம் ஆவுடையார்புரத்தை சேர்ந்த முத்துமணி என்பவருக்கும், ஆவுடையார்புரம் வஉசி மனமகிழ் மன்றத்தில், வரும் 24ம் தேதி திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தனது மனைவி, மகள் காயத்திரி உட்பட 7 பேருடன் திருமணத்திற்காக விருதுநகர் மாவட்டத்திற்கு செல்ல இ-பாஸ் கேட்டு சந்திரசேகரன் ஆன்லைனில் விண்ணப்பித்தார்.

இதற்காக முறையாக அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்த பிறகும், இவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதனால், அவரது குடும்பமே மன உளைச்சலில் உள்ளது. இதுகுறித்து சந்திரசேகரன் கூறுகையில், ‘‘மகள் திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்து முடித்துவிட்டேன். திருமணத்திற்கு வெளியூர் செல்ல இ-பாஸ்  வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ள நிலையில், தற்போது நான் இ-பாஸ் கேட்டு விண்ணப்பித்தால், அதிகாரிகள் மறுத்துள்ளனர். இதனால் எங்களது குடும்பம் மிகுந்த மன உளைச்சலில் உள்ளது. அனைத்து ஆவணங்களும் முறையாக சமர்ப்பித்தும், அதிகாரிகள் எனது விண்ணப்பத்தை நிராகரித்தது ஏன் என தெரியவில்லை. இதனால்,  எனது மகள் திருமணத்தை நடத்த முடியாத நிலை உள்ளது,’’ என்றார்.

Tags : SI ,E-Pass ,daughter wedding , Daughter married, SI family, e-pass
× RELATED ‘பெங்களூரு குண்டு வெடிப்புக்கும் எஸ்.ஐ.வில்சன் கொலைக்கும் தொடர்பில்லை’