×

பாகிஸ்தான் போரின் கதாநாயகன் வோரா கொரோனாவுக்கு பலி

புதுடெல்லி: மகாவீர் சக்ரா விருது பெற்ற ஓய்வு பெற்ற லெப்டினென்ட் ஜெனரல் மோகன் வோரா, கொரோனா தொற்றினால் உயிரிழந்தார். கடந்த 1932ம் ஆண்டு சிம்லாவில் பிறந்தவர் ராஜ் மோகன் வோரா. ராணுவத்தில் சேர்ந்த இவர், கடந்த 1971ம் ஆண்டு நடந்த இந்தியா-பாகிஸ்தான் போரில் பங்கேற்றார். இவர் எதிரிகளால் கடுமையான தாக்குதலுக்கு உள்ளானார். எனினும், இவரது தலைமையிலான படைப் பிரிவானது எதிரிகளின் 27 பீரங்கிகளை தாக்கி அழித்தது. இவர் இந்தியா-பாகிஸ்தான் போரின் கதாநாயகனாக வர்ணிக்கப்பட்டார்.

1972ம் ஆண்டு இவருக்கு இந்திய அரசின் உயரிய விருதான மகாவீர் சக்ரா விருது வழங்கப்பட்டது. 88 வயதாகும் இவர், கொரோனா நோய் தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி கடந்த 14ம் தேதி உயிரிழந்தார்.

Tags : war hero ,Pakistan ,Vora Corona , Pakistan, Vora, Corona, Killed
× RELATED பாகிஸ்தானில் பயங்கரம் தற்கொலை படை தாக்குதல் 5 சீன பொறியாளர்கள் பலி