டெல்லி அமைச்சருக்கு காய்ச்சல் ம.பி. கவர்னருக்கு மூச்சுத்திணறல்

புதுடெல்லி: டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின். நேற்று அவருக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டதால், மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர், டெல்லி ராஜிவ் காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு கொரோனா இல்லை என்று தெரியவந்தது. இதேபோல், மத்தியப் பிரதேச கவர்னர் லால்ஜி டாண்டன் ((85), காய்ச்சல் இருந்ததால், லக்னோவில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த 11ம் தேதி முதல் அவர் அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், நேற்று அவருக்கு திடீரென மூச்சு விடுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு வெண்டிலேட்டர் கருவி உதவியுடன் சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை சீராக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளன்.

Related Stories:

>