×

சென்னைவாசிகளின் வாழ்வை கேள்விக்குறியாக்கிய கொரோனா!! : 15 மண்டலங்களிலும் ருத்ரதாண்டவம்; சென்னையில் இன்று 13 பேர் பலி!!

சென்னை:  சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் இதுவரை 5,486 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஜூன் 17ம் தேதி நிலவரப்படி, சென்னையில் எந்த பகுதியில் எத்தனை பேருக்கு தொற்று என்பதை மண்டல வாரியாக சென்னை மாநகராட்சி வெளியிட்டது. சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 34,245 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 18,565 பேர் குணமடைந்துள்ள நிலையில் 422 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 60.09% பேர் ஆண்கள், 39.90% பெண்கள் ஆவர். 0.01% திருநங்கைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜூன் 17ம் தேதி நிலவரப்படி சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதித்தவர்கள் விவரத்தை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. அவற்றின் விவரத்தை இப்போது பார்ப்போம்.

ராயபுரம் – 5,486
கோடம்பாக்கம் – 3,648
திரு.வி.க நகரில் – 3,041
அண்ணா நகர் – 3,431
தேனாம்பேட்டை – 4,143
தண்டையார் பேட்டை – 4,370
வளசரவாக்கம் – 1,444,
அடையாறு – 1,931
திருவொற்றியூர் – 1,258
மாதவரம் – 922
பெருங்குடி – 646,
சோளிங்கநல்லூர் – 639,
ஆலந்தூர் – 699,
அம்பத்தூர் – 1,190
மணலி – 483 பேர், மற்ற மாவட்டங்களுக்கு மாற்றி அறிவிக்கப்பட்ட 914 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் கொரோனாவுக்கு இன்று மட்டும் 13 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Tags : Chennai ,residents ,zones ,Rudradandavam ,questioning , Chennai, Life, Questionnaire, Corona, 15 Zones, Rudradandavam, Chennai, Bali
× RELATED சென்னை மாவட்டத்தில் 16 சட்டமன்ற...