×

இந்தியா - சீனா எல்லைப்பிரச்னை குறித்து அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருகிறது,

டெல்லி: இந்தியா-சீனா இடையே மோதல் அதிகரித்து வருவது வருத்தம் அளிக்கிறது என்று ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கவலை தெரிவித்துள்ளார். லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய, சீன படையினர் இடையே நடந்த மோதலில், தமிழக வீரர் உட்பட 20 இந்திய ராணுவத்தினர் பலியாயினர். இந்திய ராணுவத்தினர் நடத்திய பதில் தாக்குதலில் சீன படையில் பலி மற்றும் படுகாயம் அடைந்தோர் சேர்த்து 43 பேர்  என கூறப்படுகிறது. 45 ஆண்டுக்குப் பிறகு இந்தியா-சீனா ராணுவம் இடையேயான மோதலில் உயிர்பலி ஏற்பட்டுள்ளதால் போர் மூளும் அபாயம் நிலவி வருகிறது.

இந்தியா  சீனா 3,488 கிமீ தூர எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன. இதில் பல இடங்களில் இரு நாட்டு எல்லை சரியாக நிர்ணயிக்கப்படாததால் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. கடந்த 2017ல் சிக்கிம் மாநிலம் டோக்லாமில் இரு நாட்டு படைகளும் நேருக்கு நேர் சந்தித்து 73 நாட்கள் பதற்றம் நீடித்த நிலையில், 3 ஆண்டுகளுக்குப்பிறகு, கடந்த மே மாதம் கிழக்கு லடாக் பிராந்தியத்தில் இரு நாட்டு ராணுவம் இடையே மோதல் ஏற்பட்டது. அங்குள்ள கல்வான் பள்ளத்தாக்கிலும், பாங்காங் திசோ ஏரிப்பகுதியிலும் இந்தியா சாலை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துகிறது.

மேலும் அவர் கூறியதாவது: இந்தியா- சீனா எல்லை பிரச்சனையில் அமைதியான முறையில் தீர்வு காண அமெரிக்கா உதவ தயாராக இருக்கிறது. இந்தியா - சீனா எல்லைப்பிரச்னை குறித்து அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருகிறது. இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீர மரணம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களது குடும்பங்களுக்கு எங்களது ஆழ்ந்த இரங்கல்கள். எல்லையில் இந்திய, சீன படைகள் வாபஸ் பெறப்பட்டுள்ளன.

தற்போதைய சூழலில் அமைதி திரும்ப இருநாடுகளும் எடுக்கும் முயற்சியை அமெரிக்கா ஆதரிக்கிறது இவ்வாறு அந்நாட்டின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். மேலும்  இந்திய தேசியவாத புலியின் கோபத்தை சீன ராணுவம் தூண்டிவிட்டிருப்பதாக அமெரிக்க செய்திதாளில் செய்தி வெளியாகியுள்ளது.

Tags : US ,China ,India , India, China, border dispute, USA
× RELATED அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய...