×

ஆர்.எஸ்.பாரதி புகார் முடித்துவைப்பு

சென்னை:  தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி பகுதிகளில் 462 கிலோ மீட்டர் தூரத்திற்கு, சாலைகள் விரிவாக்கத்துக்கு 1,165 கோடி ரூபாய் மதிப்பில் டெண்டர் கோரப்பட்டது. இந்த டெண்டரில் முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், இந்த டெண்டர் முறைகேட்டில் சம்பந்தப்பட்டுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி  மீது லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே, புகார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் ஆஜரான மாநில குற்றவியல் வக்கீல் ஏ.நடராஜன், மனுதாரரின் புகார் குறித்து விசாரணை நடத்தப்பட்டு புகாரில் முகாந்திரம் இல்லை என்று லஞ்ச ஒழிப்பு துறை முடிவெடுத்து புகாரை முடித்துவைத்துவிட்டதாக தெரிவித்தார்.  இதுகுறித்து மனுதாரரிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க அவரது வக்கீலுக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை 18ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Tags : Complaint , RS Bharathi Complaint
× RELATED அவர் சொல்லும் எதையும் செய்யமாட்டார்....